Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மற்றொரு முக்கிய பவுலரும் இல்லை.. சிஎஸ்கேவுக்கு வந்த அதிர்ச்சி செய்தி.. குழப்பத்தில் ஆழ்ந்த ‘தல’ தோனி

சூரத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மற்றொரு முன்னணி வீரரும் ஐபிஎல் தொடரில் சரிவர பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29 வரை நடைபெறவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாமியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.

தொடக்கமே பின்னடைவு

தொடக்கமே பின்னடைவு

இதற்காக சிஎஸ்கே அணி சூரத்தில் பயிற்சியை தொடங்கியுள்ளது. தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் முதல் பாதியில் பங்கேற்கமாட்டார் எனத்தெரிவிக்கப்பட்டது. இதனால் ப்ளேயிங் 11ல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மற்றொரு முக்கிய பவுலரும் முதல் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

தீபக் சஹாரின் இடத்திற்கு தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிரிட்டோரியஸை விளையாட வைக்க தோனி திட்டமிட்டிருந்தார். சர்வதேச அளவில் ஏற்கனவே அவர் கலக்கி வருவதால் சிஎஸ்கேவுக்காக டெத் ஓவர்களில் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தக்கூடியவர். ஆனால் இவர் ஐபிஎல்-ஐ விட தேசிய அணி தான் முக்கியம் எனச்சென்றுவிட்டார்.

காரணம் என்ன

காரணம் என்ன

தென்னாப்பிரிக்க அணி அடுத்ததாக வங்கதேசத்துடன் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மார்ச் 18ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறவிருக்கிறது. இதில் ஒருநாள் தொடருக்கான அணியில் பிரிட்டோரியஸ் இடம்பெற்றுள்ளார். அவர் டெஸ்ட் தொடரையும் முடித்துவிட்டு தான் வருவார் எனத்தெரிகிறது.

தோனிக்கு வந்த சிக்கல்

தோனிக்கு வந்த சிக்கல்

டெஸ்ட் போட்டிகள் வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முடித்துவிட்டு, இந்தியா வந்தாலும், குவாரண்டைன், பயிற்சிகளை முடித்துவிட்டு, ஏப்ரல் 19ம் தேதிக்குள் மேல் தான் ஐபிஎல் -ல் விளையாட முடியும். இது சிஎஸ்கேவுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

Story first published: Tuesday, March 8, 2022, 18:20 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+