Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: படையப்பா சல்யூட் அடித்த சஞ்சு சாம்சன்.. மிரண்டு போன டெல்லி.. கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சன் தனது அதிரடியால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். 52 பந்துகளில் சதம் விளாசிய அவர், அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'படையப்பா' பாணி சல்யூட் அடித்து கொண்டாடியது மைதானத்தையே அதிர வைத்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறிய சஞ்சு சாம்சன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் 3 போட்டிகளில் 6, 7 மற்றும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஏமாற்றம் அளித்தார். 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது சிஎஸ்கே ரசிகர்களைக் கவலையடையச் செய்தது. ஆனால், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி, இந்த சீசனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

CSK Sanju Samson s Padayappa Celebration A Masterclass Century at Chepauk Stuns Delhi Capitals

சரவெடி தொடக்கம்:

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்குத் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாம்சன், ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே தனது வேட்டையைத் தொடங்கினார். ஆக்விப் நபி வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கிய அவர், அடுத்த ஓவரிலும் பந்துகளை நாலாபுறமும் விரட்டினார். மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்கத் திணறிய போதிலும், சாம்சன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியைத் தொடர்ந்தார். சென்னை அணி பவர்பிளே ஓவர்களில் 61 ரன்களைக் குவிக்க இவரே முக்கிய காரணமாக இருந்தார்.

படையப்பா சல்யூட்:

அதிரடியாக ஆடிய சாம்சன் 26 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 52 ரன்களில் இருந்தபோது பதும் நிசங்கா கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட, அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சாம்சன் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். குல்தீப் யாதவ் மற்றும் நடராஜன் பந்துவீச்சில் சிக்சர்களைப் பறக்கவிட்டு 90 ரன்களைக் கடந்த அவர், பின்னர் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்காக தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

சதம் அடித்த உற்சாகத்தில் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி, ரஜினிகாந்தின் 'படையப்பா' திரைப்பட பாணியில் அவர் சல்யூட் அடித்தது வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற சாம்சன் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. சஞ்சு சாம்சனின் இந்த 'படையப்பா' தரிசனம் சென்னை ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது.

Story first published: Saturday, April 11, 2026, 22:10 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+