CSK: தோனிக்கு சற்றும் குறைவானவர் அல்ல சஞ்சு சாம்சன்.. களத்தில் பயிற்சியில் தல போலவே இருக்கிறார்- கோச் எரிக்
சென்னை: டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் நின்ற சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் IPL 2026 வெற்றியைப் பெற்றுத்தந்தார். இந்தச் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, சிஎஸ்கேவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சாம்சனை, ஜாம்பவான் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் ஒப்பிட்டுப் பேசினார். சாம்சன் அணியில் கொண்டுவரும் அமைதியான தன்மையை சைமன்ஸ் பாராட்டினார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாற்றப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிஎஸ்கேவுடன் இணைந்த சஞ்சு சாம்சன், சீசனின் தொடக்கத்தில் தடுமாறினார். முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 6, 7, 9 ரன்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை அணி தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. இந்த ஆரம்ப பின்னடைவுகள் இருந்தபோதிலும், சாம்சன் பதட்டமின்றி அமைதியாக இருந்தார் என்று பயிற்சியாளர் சைமன்ஸ் தெரிவித்தார்.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய எரிக் சைமன்ஸ், "தோனியுடன் பல ஆண்டுகள் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் கண்ட மிக அமைதியான கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர். சஞ்சு சாம்சனும் அதற்குச் சற்றும் குறைவானவர் இல்லை. ஆட்டத்தின் போக்கை அவர் புரிந்துகொள்கிறார். நான் அவரிடம் பதட்டத்தையோ, மேலும் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையோ, ஒருவேளை குறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையோ பார்த்ததில்லை."
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான தோல்விக்குப்பின், சாம்சன் விடுமுறையில் வீட்டிற்குச் சென்று திரும்பினார். இருப்பினும், அவரது தடுமாற்றமான காலகட்டத்திலும், சாம்சனின் திறனும், தன்னம்பிக்கையும் ஒருபோதும் சந்தேகிக்கப்படவில்லை என்று சைமன்ஸ் வலியுறுத்தினார்.
"அவரைப் போல ஒரு திறமையான வீரர் மோசமான ஆட்ட காலகட்டம் என்பது தற்காலிகமானது என்பதை அறிவீர்கள். சில சமயங்களில் அது அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததும் உண்டு. அவரது தகுதிக்குரிய ஒரு வீரரின் மனநிலை முக்கியம் என்று நான் கருதுகிறேன். நீங்கள் அவரை நம்ப வேண்டும், அவரது தரத்தை நம்ப வேண்டும், ஏனெனில் அவரிடம் அது ஏராளமாக உள்ளது," என்றார்.
ஒரு குறிப்பிட்ட உதாரணத்தினைக் கூறிய அவர், "ஒரு போட்டியில் பர்கரின் சிறந்த பந்தில் அவர் அவுட் ஆனார். சிலசமயம் அது அப்படித்தான் நடக்கும். ஒரு பந்து பவுண்டரிக்குச் செல்லும், அவர் ஒரு எட்ஜ் கொடுத்து கேட்ச் ஆகிறார்," என்று விளக்கினார்.


Click it and Unblock the Notifications