Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரன்களை வாரி வழங்கும் வள்ளல்.. ரூ3.6 கோடிக்கு ஏலம் எடுத்த சிஎஸ்கே.. கேலிக்கு நடுவில் நம்பிக்கை

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் ஜார்டனுக்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து எடுத்தது.

ஆனால், கிறிஸ் ஜார்டன் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் என்றும், சிஎஸ்கே தவறு செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால் கேலியும், கிண்டலுக்கும் நடுவில் சில நம்பிக்கை வார்த்தைகளும் இடம்பெற்றன. ஆனால் அது நடக்குமா?

கிறிஸ் ஜார்டன்

கிறிஸ் ஜார்டன்

33 வயதான கிறிஸ் ஜார்டன் இதுவரை 75 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு ஓவருக்கு 8 ரன்களை வழங்குவார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பந்து வீசியவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். ஒரு அளவுக்கு பேட்டிங் செய்ய வரும். சர்வதேச டி20 போட்டியில் 18 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

ரூ.3.6 கோடி

ரூ.3.6 கோடி

இறுதி கட்டங்களில் மெதுவாகவும் பந்துவீச தெரியும். இந்த அனுபவங்களை கருத்தில் கொண்டு ஜார்டனை 3.6 கோடி ருபாய் கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. ஆனால் கிறிஸ் ஜார்டனின் ஓவரை எளிதாக எதிர்கொண்டு ரன் அடிக்கவும் முடியும். ஏதாவது 5 போட்டியில் 1 போட்டியில் மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருவார் ஜார்டன்.

வள்ளல்

வள்ளல்

கடைசியாக ஜார்டன் விளையாடிய 5 டி20 போட்டியில் 2 முறை 4 ஓவர்கள் வீசி 50 ரன்களை வழங்கியுள்ளார் ஜார்டன். ஆனால் கடைசி 5 போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். விக்கெட்டுகள் எடுக்கும் திறமை இருந்தாலும் ரன்களை வாரி கொடுப்பதில் வள்ளல். சமீபத்தில் பிஎஸ்எல் தொடரில் முல்தான் அணிக்காக விளையாடி அதிக ரன்களை விட்டு கொடுத்தார்.

Recommended Video

IPL 2022: Smart Buys In The Mega Auction | OneIndia Tamil
நம்பிக்கை வார்த்தை

நம்பிக்கை வார்த்தை

இதனால் இவரையா எடுத்தீங்கனு சிஎஸ்கே அணியை சிலர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் நேற்றைய போட்டியின் போது ஜார்டன் இப்போது பந்துவீச, ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறலாம். ஆனால் அடுத்தது தோனிக்கு கீழ் ஐபிஎல் தொடரில் விளையாட போகிறார். அப்போது நாம் வேறு ஒரு கிறிஸ் ஜோர்டனை பார்க்கலாம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார். இதனை தோனி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, February 17, 2022, 19:26 [IST]
Other articles published on Feb 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+