IPL 2026: சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும்.. தொடர்ந்து 3 போட்டிகள் மேல் வென்றுள்ளோம்.. சிவம் துபே சூளுரை
சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் தொடர் தோல்விகளால் தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரும் சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மோதுகிறது. சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஷிவம் தூபே, ஆரம்பகாலப் போராட்டங்களுக்குப் பிறகு ஐந்து முறை சாம்பியன்கள் விரைவில் வலுவாக மீண்டு வருவார்கள் என உறுதியளித்துள்ளார்.
"ஆம், நாங்கள் 3 ஆட்டங்களில் தோற்றோம். ஆனால் கடந்த காலத்தில் நாங்கள் தொடர்ந்து 3 ஆட்டங்களுக்கும் மேலாக வென்றுள்ளோம்," என்று ஷிவம் தூபே குறிப்பிட்டார். "எனவே, எங்களது கம்பேக்கை பார்ப்பீர்கள்," என சென்னை ரசிகர்களுக்கு அவர் உறுதியளித்தார். டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் பிரவீஸ், டெல்லிக்கு எதிரான போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பேட்டிங் பலம் மேலும் அதிகரிக்கக் கூடும். பந்தவீச்சில் அகேல் ஹூசைனை சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பேட்டிங்கை விட பந்துவீச்சு மோசமாக இருக்கிறது.
ஐபிஎல் 2026 சீசனின் தொடக்கத்தில் சிஎஸ்கே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடமும், வெளியூர் ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடமும் சென்னை தோல்வியடைந்தது.
காயம் காரணமாக ஜாம்பவான் தோனி இல்லாத நிலையில், அணி இத்தகைய பின்னடைவுகளைச் சந்தித்து ஒரு மாற்றத்தை எதிர்கொள்கிறது. டெல்லி கேபிடல்ஸ் உடனான மோதலுக்குப் பின், சென்னை அணி ஏப்ரல் 14 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸை சொந்த மண்ணில் சந்திக்கிறது. தொடர்ந்து, ஏப்ரல் 18 அன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஏப்ரல் 23 அன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுடன் மோதுகிறது.


Click it and Unblock the Notifications