ஐபிஎல் 2026: சிஎஸ்கே-க்கு ரூ.14.20 கோடி போச்சா? ஏலத்தில் வாங்கிய 20 வயது ஆல்ரவுண்டருக்கு காயம்
லக்னோ: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்காக மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ₹14.20 கோடி மதிப்பிலான 19 வயது வீரரான பிரஷாந்த் வீர்ரை தேர்வு செய்தது. அதிரடி ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர் உத்திரப் பிரதேசம் - ஜார்க்கண்ட் இடையேயான ரஞ்சி டிராஃபி போட்டியில் தோள்பட்டையில் கிரேடு-2 காயம் அடைந்துள்ளார். இந்த காயம், காரணமாக வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
லக்னோவில் நடந்த இப்போட்டியில் பிரஷாந்த் வீருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவ சோதனையில், , இது ஒரு கிரேடு-2 தசைநார் கிழிவாகும். இக்காரணத்தால் அவர் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு விளையாட முடியாது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே இருப்பதால், இது சிஎஸ்கே அணிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் முதல் நாளில், ஜார்க்கண்ட் அணியின் 30வது ஓவரில், உணவு இடைவேளைக்கு சற்று முன்பு இச்சம்பவம் நிகழ்ந்தது. மிட்-ஆஃப் பகுதியில் நின்று கொண்டிருந்த வீர், ஷிகர் மோகனின் ஷாட்டை தடுக்க வலதுபுறம் பாய்ந்து விழுந்தார். பந்தை தடுத்த போதிலும், வலது தோள்பட்டையில் தடுமாறி விழுந்து, வலியால் சிறிது நேரம் களத்திலேயே இருந்தார்.
மருத்துவக் குழுவினர் உடனடியாக அவருக்கு வலி நிவாரணி அளித்தனர்.இத்ன் பிறகு ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கையில் ஸ்லிங்குடன் களத்திற்குத் திரும்பிய அவர், இப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜார்க்கண்ட் அணி முதல் நாள் முடிவில் 279 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்திருந்தது.
ஜார்க்கண்ட் தொடக்க ஆட்டக்காரர் ஷாரன்தீப் சிங் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு ஷிகர் மோகன் (78 ரன்கள்) மற்றும் ஆர்யமான் சென் (64 ரன்கள்) ஆகியோர் கணிசமான ரன்களைச் சேர்த்து உதவினர்.பிரஷாந்த் வீர், வளர்ந்து வரும் ஒரு ஆல்ரவுண்டர் ஆவார். மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன் குவித்து, இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இதுவரை ஒன்பது T20 போட்டிகளில் 167.16 ஸ்ட்ரைக் ரேட்டில் 112 ரன்களும், 16.66 சராசரியில் 12 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
20 வயதான அவர், 2025 UP T20 லீக்கில் நோய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். அத்தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்கள் (சராசரி 64, ஸ்ட்ரைக் ரேட் 155க்கு மேல்) குவித்து, 8 விக்கெட்டுகளையும் (எகானமி 6.69) எடுத்தார். 'சீசனின் வளர்ந்து வரும் வீரர்’ விருதையும் வென்றார்.
இந்த ஆட்டங்கள் அவருக்கு சிஎஸ்கே அணியில் இடம் பெற உதவியது. ரவீந்திர ஜடேஜா 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக விலகியதால், சிஎஸ்கே அவரை ஜடேஜாவுக்கு மாற்று வீரராக கருதுகிறது. அண்மையில் நடந்த விஜய் ஹசாரே டிராஃபியிலும் அவர் தன் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.ஐந்து முறை சாம்பியனான சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரில் உள்ள காலியிடங்களை நிரப்ப இவர் தேவைப்பட்டுள்ளார். மார்ச் மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடருக்குள் அவர் முழுமையாக குணமடைவார் என அணியும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications