Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய கெட்டப்- ல் தோனி.. குடும்பத்தினருடன் இன்பச்சுற்றுலா.. முக்கிய நகரத்தில் குவியும் ரசிகர்கள்!

சிம்லா: சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

New Getup-ல் Dhoni..Shimla-வில் குவியும் தோனி ரசிகர்கள் | Oneindia Tamil

இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே.4ம் தேதியுடன் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் அனைத்து அணி வீரர்களும் அடுத்த தொடர்களுக்காக சென்றுவிட்டனர்.

அப்டேட்ஸ்

அப்டேட்ஸ்

இந்திய வீரர்கள் இங்கிலாந்து மற்றும் இலங்கை சுற்றுப்பயணங்களுக்காக சென்றுவிட்டாலும், சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி என்ன செய்துகொண்டிருக்கிறார் என ரசிகர்கள் குழம்பி வந்தனர். அவரின் மனைவி சாக்‌ஷி தோனி போடும் இன்ஸ்டா பதிவுகளை பார்த்து அவ்வபோது தோனி வீட்டிலேயே தன் செல்லப்பிராணிகளுடன் பொழுதை கழித்து வருகிறார் என தெரிந்துக்கொண்டனர்.

சுற்றுலா

சுற்றுலா

இந்நிலையில் கேப்டன் தோனி ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் ஜாலி டூரில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 13 பேருடன் சுற்றுலா சென்றுள்ளார். சிம்லாவுக்கு தற்போது வருகை தருவதற்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனியை சிம்லாவில் கண்ட ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தோனி முறுக்கு மீசையுடன் புதிய லுக்கில் இருப்பதால் அவரை அடையாளம் காண்பதிலும் ரசிகர்கள் குழம்புகின்றனர்.

அடிக்கடி பயணம்

அடிக்கடி பயணம்

கடந்த 3 ஆண்டுகளில் தற்போது 2வது முறையாக சிம்லாவுக்கு தோனி சென்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு தனியார் பணவர்த்தணை நிறுனத்தின் விளம்பர படபிடிப்பிற்காக சிம்லா சென்றிருந்தார். அப்போது அவர் தன் பைக்கில் சிம்லாவை வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஐபிஎல் 2ம் பகுதி

ஐபிஎல் 2ம் பகுதி

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனியின் பழைய அதிரடியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். ஆனால் அவரின் சிறப்பான கேப்டன்சியில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்துள்ளது.இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. வரும் செப்டம்பரில் தொடங்கவிருக்கும் ஐபிஎல்-ன் 2ம் பகுதியில் தோனியின் பழைய ஃபார்மை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 20, 2021, 13:54 [IST]
Other articles published on Jun 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+