Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்சி எண் 33.. ஹர்திக் பாண்டியா டிரேட் என்ன ஆனது? ரசிகர்களை தூண்டிவிட்ட சிஎஸ்கே நிர்வாகம்!

சென்னை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வது தொடர்பாக பேசி சிஎஸ்கே அணி மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி நம்பரான 33 என்ற எண்ணை பேப்பரில் எழுதி, இந்த டிரேட் என்ன ஆனது என்று ஜாகீர் கானிடம் சிஎஸ்கே அணி நிர்வாகம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்தக்கட்ட பயிற்சியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி தலைமைப் பயிற்சியாளர் ஜாகீர் கானின் குழுவில் பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மாவும், துணைப் பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்க்கல், கரேத் பேட்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்ரீதரன் ஸ்ரீராம் துணைப் பயிற்சியாளராகவும், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபாஸ்டரும் தொடர்கின்றனர்.

Hardik Pandya

இதுதொடர்பான அறிவிப்பு வீடியோவில் ஜாகீர் கானிடம், சிஎஸ்கே அணியின் லியோ, டிரேட் என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பியது. இப்போதைக்கு இது போதும் என்று ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். அதில் லியோ காட்டிய பேப்பரில் 33 என்ற எண் இடம்பெற்று இருக்கிறது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி நம்பர் 33 ஆகும்.

இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவின் டிரேட் தொடர்பான பேச்சுவார்த்தையில் சிஎஸ்கே அணி ஈடுபட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவும் சிஎஸ்கே அணியில் இணைவது தொடர்பாக மறைமுகமாக சிக்னல் கொடுத்திருந்தார். இருப்பினும் சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் அமைதி காத்து வருகின்றன.

அண்மையில் எஸ்ஏ20 லீக் ஏலத்தில் பொல்லார்ட்டை வைத்து மும்பை அணி ஆடிய ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிஎஸ்கே அணியை வேண்டுமென்றே மும்பை அணி நிர்வாகம் பழிவாங்கியதாக பேச்சுகள் எழுந்துள்ளன. இதன் பின்னணியில் ஹர்திக் பாண்டியாவின் டிரேட் விவகாரம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு வீரர் டிரேட் செய்யப்பட வேண்டுமென்றால், அந்த வீரரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணியை தவிர்த்து வேறு எந்த அணிக்கும் செல்ல விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மும்பை அணி தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியை வம்புக்கு இழுப்பதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, October 27, 2026, 17:59 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+