Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வருஷம் சிஎஸ்கேவின் ஒரே நம்பிக்கை நீதான்பா.. நூர் அகமது பக்கம் சாய்ந்த சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பியையும் வென்றார்.

சிஎஸ்கே அணி இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வி அடைந்த நிலையில், நூர் அகமதுவின் பந்துவீச்சு மட்டுமே சிஎஸ்கே அணிக்கு ஆறுதலாக அமைந்தது. இதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் நூர் அகமது தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை பிளே ஆஃப் அழைத்து செல்ல வேண்டும் என கூறத் துவங்கி உள்ளனர்.

CSK Spinner Noor Ahmad Grabs Purple Cap with 3 Wickets Against RCB in IPL 2025

2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் முதல் போட்டியில் நூர் அகமது நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிலிப்ஸ் சால்ட், விராட் கோலி மற்றும் லியாம் லிவிங்க்ஸ்டன் ஆகிய மூன்று முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை நூர் அகமது வீழ்த்தினார்.

நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் நூர் அகமது.

அதன் மூலம் அவர் தற்காலிகமாக ஊதா நிற தொப்பியை வென்றார். இது பற்றி அவர் பேசுகையில், "ஊதா நிற தொப்பியை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரின் இறுதிவரை இதை தக்க வைப்பேன் என நம்புகிறேன். இந்த போட்டிக்கான பிட்ச் சற்று வித்தியாசமாக இருந்தது. அதிகமாக பந்து சுழலவில்லை. நான் அதிக தூரத்தில் இருந்து பந்துகளை வீசினேன். தோனி ஸ்டம்புக்கு பின்னே இருப்பது எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்" என்றார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது. அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி தோல்வி அடைந்தது.

செய்தி சுருக்கம்:

  • ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • இதன் மூலம் ஐபிஎல் 2025 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான ஊதா தொப்பியை அவர் வென்றார்.
  • இந்த தொடரில் இதுவரை நூர் அகமது 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
  • மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Story first published: Friday, March 28, 2025, 22:45 [IST]
Other articles published on Mar 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+