Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK Squad 2025: சிஎஸ்கே அணியில் இருக்கும் மிகப் பெரிய ஓட்டை! எப்படி சமாளிப்பார் தோனி,ருதுராஜ்?

சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட பலமான வீரர்களையே வாங்கி குவித்திருக்கிறது. ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகிகள் செயல்பட்ட விதத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டுமே பலமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஸ்வின் 10 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் மட்டும் ஒரு குறையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

Csk squad 2025 ipl auction 2025 ipl

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போது தொடக்க வீரர்களாக ருதுராஜ், கான்வே இரண்டு வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். மாற்று தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சூழலில் மூன்றாவது வீரராக அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் திருப்பாதி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

நான்காவது வீரராக விஜய் சங்கர், ஐந்தாவது வீரராக தீபக் ஹூடா, ஆறாவது வீரராக ஷாம் கரன் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். போதாத குறைக்கு தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற வீரர்கள் நடு வரிசையில் இருக்கிறார்கள். ராகுல் திரிபாதி, விஜய் சங்கர் ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்கள் கிடையாது என்றும் அவர்கள் அதிரடியாக விளையாட மாட்டார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதில் ஒரு அளவுக்கு நியாயம் இருந்தாலும், சிஎஸ்கே அணி இதுபோல் சாதாரண வீரர்களை கூட அசாதாரண வீரர்களாக மாற்றி இருக்கிறார்கள். சிஎஸ்கேக்கு வருவதற்கு முன்பு சிவம் துபே மோசமான பேட்ஸ்மேன் என்ற பெயரை வாங்கி இருந்தார். ஆனால் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு அவர் சிக்சர் மன்னனாக மாறிவிட்டார்.

அதேபோன்று கடந்த காலங்களில் ரகானே, உத்தப்பா போன்ற வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் கடைசி கட்டத்தில் இருந்தார்கள். சிஎஸ்கேவுக்கு வந்து புதிய திருப்பத்தை பெற்றார்கள். அதேபோல் ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர் போன்றவர்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. நடு வரிசையில் தீபக் ஹூடா மற்றும் ராகுல் திருப்பாதி ஆகியோர் தலா இருபது, முப்பது ரன்களை வேகமாக அடித்தாலே டி20 கிரிக்கெட்டுக்கு போதுமானது.

சிஎஸ்கே அணியில் இருக்கும் மிகப்பெரிய குறையே ஜடேஜாவும், தோனியும் நல்ல பார்மில் இருக்கிறார்களா, இல்லையா என்பதுதான். இருவரும் நல்ல உடல் தகுதியுடன் இருந்து பழையபடி அதிரடி காட்டினார்கள் என்றால் நடுவரிசையில் அவர்களை களம் இறக்கி பிரச்சனையை தீர்த்து விடுவார்கள். இதுபோன்று சிஎஸ்கே அணியில் பிக் ஷாட் ஆடக்கூடிய சில இளம் இந்திய வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணியில் எப்போதும் போல் இல்லாத வகையில் இம்முறை பந்துவீச்சும் சிறப்பாக அமைந்திருப்பதால், பிளே ஆப் சுற்று வரை கண்டிப்பாக முன்னேறி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 27, 2024, 10:00 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+