Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஹார்ட் அட்டாக் ஆட்டம்.... மீண்டும் திரில் வெற்றி... மீண்டும் பைனல்சில் சிஎஸ்கே!

Recommended Video

மீண்டும் பரபரப்பு... டு பிளசிஸ் அதிரடி... பைனல்சில் சிஎஸ்கே!

மும்பை: ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்கியது. லீக் ஆட்டங்களில் 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிடத்தையும், 18 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சிஎஸ்கே அணி இந்த சீசனையும் சேர்த்து தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் முன்னேறியுள்ளது. இந்த சாதனையை புரிந்துள்ள ஒரே அணி சிஎஸ்கேதான். இதுவரை 8 சீசன்களில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. 4 முறை இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2 முறை மட்டுமே பைனல்ஸ் வாய்ப்பை இழந்தது.

சரியான போட்டி

சரியான போட்டி

இந்த சீசனில் மிகவும் வலுவான பேட்டிங்கை கொண்டதாக சிஎஸ்கே உள்ளது. அதே நேரத்தில் மிகவும் வலுவான பவுலிங் வரிசையை ஹைதராபாத் கொண்டுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை மோதிய இரண்டு ஆட்டங்களிலுமே சிஎஸ்கேதான் வென்றுள்ளது.

நேரடி பைனல்ஸ் வாய்ப்பு

நேரடி பைனல்ஸ் வாய்ப்பு

மும்பையில் நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வென்றால், நேரடியாக பைனல்ஸ் நுழையலாம். இதில் தோற்கும் அணிக்கு, கொலகத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதிச் சுற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதில் வெற்றி பெறும் அணிதான் பைனல்ஸ் முன்னேறும்

ஹைதராபாத்தை சுருட்டியது

ஹைதராபாத்தை சுருட்டியது

இந்த நிலையில் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி துவக்கத்தில் இருந்தே ரன் குவிக்க திணறியது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொதப்ப ஒரு கட்டத்தில் பரிதாப நிலையில் இருந்தது. கடைசியில் யூசுப் பதான் 24, கார்லோஸ் பிராத்வொயிட் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்து சரிவில் இருந்து மீட்டனர்.

பைனல்சில் சிஎஸ்கே

பைனல்சில் சிஎஸ்கே

மிகவும் சுலபமான இலக்குடன் சிஎஸ்கே பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால், வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தது. ஷேன் வாட்சன் 0, ரெய்னா 22, ராயுடு 0, தோனி 9, பிராவோ 7, ஜடேஜா 3, சாஹர் 10, ஹர்பஜன் 2 என்று ஆட்டமிழக்க தோல்வியில் விளிம்பில் சிஎஸ்கே இருந்தது. ஒரு பக்கம் பொறுமையாக விளையாடிய டுபிளாசி கடைசி வரை நிலைத்து நின்றார். கடைசி ஓவர்களில் அவர் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். கடைசியில் வந்த ஷர்துல் தாக்குர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து சிஎஸ்கே வென்றது. இதன் மூலம் சிஎஸ்கே பைனல்ஸ் முன்னேறியது.

Story first published: Tuesday, May 22, 2018, 22:53 [IST]
Other articles published on May 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+