Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்காக ருத்துராஜ் போட்ட சத்தியம்.. சென்னை ரசிகர்களுக்காக கண்டிப்பாக செய்வேன் என உறுதி.. விவரம்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் தோனிக்காக ஒரு சூளுரை மேற்கொண்டு இருக்கிறார்.

சென்னை அணிக்காக 2020 ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். எனினும் அவர் ஒரு முறை கூட சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது இல்லை.

இதனால் வரும் சீசனில் தனது முதல் ஐபிஎல் போட்டியை சென்னை அணியின் கோட்டையில் அவர் விளையாட இருக்கிறார்.

குறிக்கோள்

குறிக்கோள்

இது குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னை மக்கள் முன் ஐபிஎல் போட்டியில் விளையாட மிகவும் ஆசையாக இருக்கிறது. அந்த நாளுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எனக்குத் தெரியாது. அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. என்னுடைய குறிக்கோள் எல்லாம் தோனிக்காக நான் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும்.

ரசிகர்களுக்காக செய்வேன்

ரசிகர்களுக்காக செய்வேன்

சென்னை ரசிகர்கள் முன் நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை. இதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். ஐபிஎல் போட்டியில் நான் இன்னும் சதம் அடிக்கவில்லை. அதற்காகவும் முயற்சி செய்வேன். நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை எல்லாம் நான் தோனியிடமிருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கோலி

கோலி

தோனி எனக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறார். அவர்தான் என்னுடைய ரோல் மாடல். கிரிக்கெட் யுத்தி மற்றும் விளையாடும் விதம் பொருத்து பார்த்தால் எனக்கு விராட் கோலியை மிகவும் பிடிக்கும். விராட் கோலி போல் விளையாட தான் நான் ஆசைப்படுகிறேன். இன்ஸ்டாகிராமில் எப்போதும் விராட் கோலி போடும் பதிவுகளை தொடர்ந்து பின் தொடருவேன்.

தோனி தான் தல

தோனி தான் தல

தமிழ் சினிமா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நான் கடைசியாக கங்கனா ரனாவத் நடித்த தலைவி திரைப்படத்தை தான் திரையரங்கில் சென்று பார்த்தேன்.தமிழ் படத்தில் ரஜினிகாந்த் நடித்த ரோபோ பார்த்திருக்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு தல பிடிக்குமா தளபதி பிடிக்குமா என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு என்னை பொறுத்தவரை ஒரே தல அது தோனி தான் என்று ருத்துராஜ் தெரிவித்து உள்ளார்.

Story first published: Wednesday, December 21, 2022, 20:13 [IST]
Other articles published on Dec 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+