For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியை விட்டு ரெய்னா நீக்கம்.. தோனி அப்போது என்ன செய்தார்.. சின்ன தல சொன்ன சுவாரஸ்ய தகவல்

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான வீரர் என்றால் அது சுரேஷ் ரெய்னா தான். தோனி கூட சில போட்டிகளில் விளையாட தடுமாறினாலும் ரெய்னா நம்பர் 3வது வீரராக களம் இறங்கி பல்வேறு போட்டிகளில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் இறுதிப்போட்டிகள் மற்றும் விளையாட்டுக்கு சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்றால் அது ரெய்னா தான். அப்படிப்பட்ட ரெய்னாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு பாதியில் நீக்கியது.

மேலும் அடுத்த சீசனில் ரெய்னாவை அணியில் எடுக்க வில்லை. இதனால் ரெய்னாவுக்கும் தோனிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் ரெய்னா அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிஎஸ்கே அணியை விட்டு ரெய்னா நீக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சின்னதல ரெய்னா 12 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் அடித்திருந்தார்.

CSK Star batsman suresh Raina explains how dhoni bring uthappa

அப்போது ரெய்னாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கி ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு வழங்கியது. அப்போது தோனி தம்மிடம் வந்து உனது இடத்தில் உத்தப்பாவை விளையாட வைக்கலாமா என்று என்னிடம் அனுமதி கேட்டார் என்று ரெய்னா கூறியுள்ளார். உடனே நான் உத்தப்பா கிரிக்கெட்டில் மீண்டும் சாதிப்பதற்காக கடுமையாக பயிற்சிகளை எடுத்து வந்திருக்கிறார். அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

நீங்கள் தாராளமாக விளையாட வையுங்கள் என்று நான் கூறினேன். அணியை விட்டு நீக்கும் போது தோனி தம்மிடம் வந்து அனுமதி வாங்கியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது என்று ரெய்னா கூறியுள்ளார். ரெய்னாவுக்கும் தோனிக்கும் உறவில் விரிசல் ஏற்பட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் ரெய்னாவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. மேலும் ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே ஐந்தாவது முறையாக வென்ற போது ரெய்னா தோனியை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சி வெளிப்படுத்திய வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Story first published: Friday, June 16, 2023, 22:37 [IST]
Other articles published on Jun 16, 2023
English summary
CSK Star batsman suresh Raina explains how dhoni bring uthappa சிஎஸ்கே அணியை விட்டு ரெய்னா நீக்கம்.. தோனி அப்போது என்ன செய்தார்.. சின்ன தல சொன்ன சுவாரஸ்ய தகவல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+