Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் உங்களை விட போவதில்லை.. சிஎஸ்கே வைத்த மெகா டிவிஸ்ட்.. உண்மையில் நடந்தது என்ன?

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து, அஸ்வினை சிஎஸ்கே அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வாங்கி இருந்தது.

இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை. 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்தார். இதனால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றும் என்று செய்திகள் உலா வந்தது.

R Ashwin

ஆனால் உண்மையில் நடந்ததே வேறு என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வின் ஒரு ஜாம்பவான் என்பதால் அவருக்கு உரிய மரியாதையை சிஎஸ்கே எப்போதுமே கொடுக்கும் என அந்த அணியின் தொடர்புடைய வட்டாரம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாகத்தான் சிஎஸ்கே கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராக அஸ்வின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த தருணத்தில் அஸ்வின் தான் சிஎஸ்கே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தான் கடந்த சீசன்களில் சரியாக விளையாடவில்லை. மேலும் 14 போட்டிகளிலும் தான் விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் என்னுடைய பொறுப்பு என்ன? எனக்கு என்ன ரோல் வழங்கப்படுகிறது? இல்லை என்னை அணியை விட்டு நீக்கி கொள்கிறீர்களா என்று அஸ்வினை கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து சிஎஸ்கே தரப்பு, அஸ்வினை விடுவிக்கும் முடிவில் அணி நிர்வாகம் இல்லை என்றும் சிஎஸ்கே வின் எதிர்காலத்திற்கு ஒரு வீரராக இல்லை என்றாலும் முக்கிய நிர்வாகியாக உங்களை பணியில் அமர்த்தும் விருப்பத்துடன் இருக்கின்றோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதற்கு அஸ்வின் தம்மால் இன்னும் சில காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என்றும் அதன் பிறகு தான் கிரிக்கெட்டை தாண்டிய பொறுப்புகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். தான் 14 போட்டிகளிலும் விளையாட வில்லை என்றால் தன்னை விடுவித்து விடுங்கள் என்றும் அஸ்வின் கூறி இருக்கிறார். அஸ்வின் இந்த கருத்துக்கு சிஎஸ்கே நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து அவரை அணியிலே தொடர வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Story first published: Monday, August 11, 2025, 23:26 [IST]
Other articles published on Aug 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+