
களத்தில் சி.எஸ்.கே.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி எந்த செய்தியும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்காகவே உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ். சென்னை அணி அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து முழுக்க முழுக்க இளம் வீரர்களையே தேர்வு செய்ய உள்ளது. அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டது.

சி.எஸ்.கே.வின் திட்டம்
2 ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேடி தான் ருத்துராஜ் கெய்க்வாட்டை சென்னை அணி தேர்வு செய்தது. தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக மாறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வாங்கி தந்தார்.

அடுத்த வீரர் ரெடி
தற்போது, அதே போல் இன்னொரு ருத்துராஜ் கெய்க்வாட்டை கண்டுபிடித்துள்ளது சென்னை அணி. ஆம், ஓடிசாவை சேர்ந்த 24 வயதான சுப்ரான்சு சேனாபதியை தான் சென்னை அணி தற்போது குறிவைத்துள்ளது. சேனாபதி விஜய் ஹசாரே கோப்பையில் ஓடிசா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை 7 போட்டிகளில் அவர் 275 ரன்கள் விளாசியுள்ளார். அதில் ஒரு சதமும் அடங்கும்
Recommended Video

சி.எஸ்.கே. திட்டம்
இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் சேனாபதி 5 போட்டிகளில் விளையாடி 138 ரன்கள் விளாசியுள்ளார். சேனாபதியின் பேட்டிங் ஸ்டைலும் கிட்டதட்ட ருத்துராஜை போல் உள்ளது. இதனால் அவரை சென்னைக்கு அழைத்து, அவரது பேட்டிங்கை பரிசோதித்து பார்க்க சென்னை அணி திட்டமிட்டுள்ளது. இதனால் ஏலத்தில் சேனாபதியை சென்னை அணி குறிவைக்கும். இது போன்று உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களை குறிவைத்து, சென்னை அணி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications