
அற்புத காலம்
கொரோனா காலத்திற்கு முன்பு சென்னையில் சிஎஸ்கே அணி பயிற்சி செய்யும் போது எல்லாம் ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் ரசிகர்கள் பெருமளவில் சிஎஸ்கே அணி பயிற்சி செய்வதை கண்டு களிப்பார்கள். தங்களுக்கு பிடித்தமான வீரர்களை நேரில் கண்டு ரசிப்பார்கள்.

கொரோனா அச்சம்
இந்த நிலை நான்காண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்து சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த காலங்களை போல் சிஎஸ்கே அணி ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்காமல் இருந்தது.

இன்ப அதிர்ச்சி
தற்போது டிக்கெட் பிரச்சனை சர்ச்சையான நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சிஎஸ்கே அணி பயிற்சி செய்யும் போது வெறும் மூன்று கேலரிகளில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத சிஎஸ்கே ரசிகர்கள் 6:00 மணிக்கு எல்லாம் மைதானத்தின் திரண்டு விட்டனர். பொது மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தோனி பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.

அகமதாபாத் புறப்பாடு
அதனை ஏராளமான ரசிகர்கள் வெளியில் இருந்து பார்த்து ஆரவாரம் செய்தனர். இதே போன்று மைதானத்திற்கு உள்ளே இருந்தும் தோனி! தோனி! என ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். சிஎஸ்கே அணி மோதும் முதல் போட்டி வரும் 31ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் நாளை அகமதாபாத் செல்ல உள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை அங்கு சிஎஸ்கே பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த முறை குஜராத் அணியுடன் மோதிய இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications