Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20 ஆண்டில் இப்படி நடந்ததில்லை.. பேட்டிங் கோச் இல்லாம இறங்கும் சிஎஸ்கே.. உறுதி செய்த காசி விஸ்வநாதன்!

சென்னை: 20வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. பேட்டிங் ஆலோசகராக கரேட் பேட்டி நியமனம் செய்வதற்கான ஆலோசனைகள் நடப்பதாகவும், ஆனால் இறுதி முடிவை ஜாகீர் கான் தான் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாகீர் கானின் குழுவில் இடம்பெறும் துணைப் பயிற்சியாளர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோருக்கு மட்டுமே பயிற்சியாளர்கள் குழுவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

CSK

இதில் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஏற்கனவே ஜாகீர் கானுடன் லக்னோ அணியில் பணியாற்றியவர். ஜேம்ஸ் ஃபாஸ்டர் கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணியில் இணைந்தார். அதேபோல் புதிதாக ஆல்பி மோர்க்கல், கரேட் பேட்டி ஆகியோர் துணைப் பயிற்சியாளர்களாகவும், மோகித் சர்மா பவுலிங் பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், ஜாகீர் கான் எடுத்த முடிவு தான் பேட்டிங் பயிற்சியாளர் தொடர்பானது தான். இருப்பினும் பேட்டியை பேட்டிங் ஆலோசகராக செயல்பட வைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

ஹர்திக் பாண்டியா டிரேட் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு ஆகியோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பயிற்சியாளர் குழுவில் வேறு யாரும் இணைய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐபிஎல் தொடர் வரலாற்றில் பேட்டிங் பயிற்சியாளர் இல்லாமல் களமிறங்கும் முதல் அணி சிஎஸ்கே தான். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் பேட்டிங்கும், பேட்ஸ்மேன்களும் தான் அடிப்படை. அந்த அடிப்படையை சரி செய்ய பயிற்சியாளர்கள் அவசியம். இதனால் பயிற்சியாளரே இல்லாமல் சிஎஸ்கே இறங்குவது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, October 28, 2026, 13:27 [IST]
Other articles published on Oct 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+