Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் புதிய ஓப்பனர் இவர்தான்.. மும்பை வீரரை தூக்கும் தல தோனி.. முக்கிய வீரரை நீக்க முடிவு!

சென்னை: மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ஆஸ்திரேலிய
கிரிக்கெட் வீரர் கிறிஸ் லைனை சிஎஸ்கே அணி இந்த வருடம் ஏலம் எடுக்க உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடக்க உள்ளது. இந்த
ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் விண்டோ ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.

அதன்படி ஜனவரி 20ம் தேதி வரை இந்த டிரேடிங் விண்டோவிற்கான வீரர்கள் லிஸ்டை
அணிகள் வெளியிட முடியும்.

ஏலம்

ஏலம்

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 4ம் தேதி டிரேடிங் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகும். அதன்பின் 11ம் தேதி சிறிய ஏலம் நடக்கும். இந்த ஏலத்திற்கு முன்பாக வீரர்கள் பலர் டிரேடிங் செய்யப்படவுள்ளனர்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் தற்போது ஓப்பனிங் வீரர்கள்தான் இல்லை. அணியில் இருந்து வாட்சன் வெளியேறி உள்ள நிலையில் இன்னொரு ஓப்பனிங் வீரரை சிஎஸ்கே களமிறக்க

வேண்டும். இதற்காக மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லைனை சிஎஸ்கே அணி இந்த வருடம் ஏலம் எடுக்க உள்ளது.

எப்படி

எப்படி

இதற்காக சிஎஸ்கே வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வெளிநாட்டு வீரர் மிட்சல் சான்டனரை சிஎஸ்கே வெளியேற்ற உள்ளது. மும்பை அணியுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது என்கிறார்கள். சான்டனரை மும்பை அணி வாங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.

மாற்றம்

மாற்றம்

2020 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் லைன் இடம்பெற்று இருந்தார். ஆனால்

இவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் தற்போது

கிறிஸ் லைனை சிஎஸ்கே அணி இந்த வருடம் ஏலம் எடுக்க உள்ளது. பிபிஎல் தொடரில்

இவர் சிறப்பாக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Story first published: Friday, January 8, 2021, 15:49 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+