For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருத்துராஜ்.. வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே.. அடித்து கூறும் விசயங்கள்

மும்பை: அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

CSK தோல்விக்கு உண்மையான காரணம் இதுதான்.. Ruturaj Gaikwad உருக்கம் #Cricket | Oneindia Tamil

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் அது தெளிவாகியுள்ளது.

நடப்பு சீசனுக்கு முதல் நாள் கேப்டன் பதவிக்கு வந்த ஜடேஜா, 8 போட்டிகள் முடிந்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

தோனிக்கும் அடுத்த சீசனில் 41 வயதாகி விடும் என்பதால், அவர் அணியில் இருப்பதே சிரமம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில பேர் சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் அது தெளிவாகி இருப்பதாக கூறுகின்றனர்.

சிஎஸ்கே வீடியோ

சிஎஸ்கே வீடியோ

சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு காரணமாக அந்த அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடவோம் என்றும், ரசிகர்கள் தங்களுக்கு எப்போதும் போல் ஆதரவு வாங்க வேண்டும் என்று ருத்துராஜ் கெய்க்வாட் அந்த வீடியோவில் தோன்றி ரசிகர்களிடம் உரையாடினார்.

அடித்து கூறும் ரசிகர்கள்

அடித்து கூறும் ரசிகர்கள்

இதே போன்று 2020ஆம் ஆண்டு சென்னை தோற்ற போது, தோனி இதே ஸ்டைலில் பேசிய வீடியோ உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனை வைத்து பார்த்தால் அடுத்த ஆண்டு ருத்துராஜ் தான் சிஎஸ்கேக்கு தலைமை தாங்குவார் என்றும் அதனால் தான் அவரை வைத்தே வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளதாகவும் ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.

இன்று தெரிந்துவிடும்

இன்று தெரிந்துவிடும்

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் முடிவில் தோனி எப்படியும் கிரிக்கெட் வர்ணணையாளர்களிடம் பேசும் போது, அவரது எதிர்காலத்தை பற்றியும்,சிஎஸ்கேவின் எதிர்காலத்தை பற்றியும் கூறுவார். அதில் உண்மை என என்று தெரிந்துவிடும். ஒருவேலை தோனியும் அடுத்த ஆண்டு கேப்டனாக தொடர்ந்தால், அவருக்கு துணை கேப்டனாக ருத்துராஜ் செயல்படுவார் என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Friday, May 20, 2022, 19:17 [IST]
Other articles published on May 20, 2022
English summary
CSK Video decoded by the fans about the next captain சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருத்துராஜ்.. வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+