Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: “ஆயுஷ் நீ ஒழுங்கா ஆடலை வெளியே வா”.. மெகா ஸ்கோர் குவிக்க சிஎஸ்கே வகுத்த வியூகம்

சென்னை: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 2026 ஐபிஎல் லீக் போட்டியில், சஞ்சு சாம்சனின் அபார சதம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வியூகத்தால் சிஎஸ்கே 212 ரன்களைக் குவித்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

துவக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். ஆனால், மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய அவர், வெறும் 56 பந்துகளில் 115 ரன்களைக் குவித்து அசத்தினார். இவருக்குத் துணையாக ஆடிய இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 27 பந்துகளில் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

CSK vs DC Ayush Mhatre retired out as Chennai Super Kings scored 212 runs against Delhi capitals

சிஎஸ்கே-வின் திடீர் வியூகம்:

ஆட்டத்தின் 18-வது ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அரைசதம் கடந்த பிறகு ஆயுஷ் மத்ரேவின் அதிரடி சற்று குறைந்தது. அவர் கடைசி 9 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துகள் வீணாவதைத் தடுக்க விரும்பிய சிஎஸ்கே நிர்வாகம், 18-வது ஓவரின் பாதியிலேயே 'ரிட்டையர் அவுட்' முறையில் மத்ரேவை வெளியேறச் செய்தது.

யாரும் எதிர்பார்க்காத இந்த 'மாஸ்டர் பிளான்' மூலம், மற்றொரு அதிரடி வீரரான சிவம் துபே களம் புகுந்தார். இந்த முடிவு சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக அமைந்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்.

இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 115 ரன்களுடனும், சிவம் துபே 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 213 ரன்கள் என்ற கடின இலக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது,

Story first published: Saturday, April 11, 2026, 21:27 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+