Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: சிஎஸ்கே அணியில் அதிரடி மன்னன் மாஸ் என்ட்ரி.. ரசிகர்கள் உற்சாகம்.. பிளேயிங் 11 என்ன?

சென்னை: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சிஎஸ்கே அணியில் பிரெவிஸ் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அது ரசிகர்களுக்கு உற்சாக செய்தியாக அமைந்தது.

டாஸ் வென்ற பின் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், "ஆடுகளம் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. இலக்கை துரத்தி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அணியின் சூழல் மிகவும் அமைதியாக உள்ளது. கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றைய போட்டியில் நிதிஷ் ராணா மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோருக்குப் பதிலாக ஆக்விப் நபி மற்றும் அசுதோஷ் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.

CSK vs DC in IPL 2026 Toss Playing XI imapact subs captain speech and pitch condition report

சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், "இந்த சிவப்பு மண் ஆடுகளத்தில் நானும் முதலில் பந்துவீசவே நினைத்தேன். ஆடுகளம் உலர்ந்த நிலையில் இருப்பதால் டாஸ் முடிவு 50-50 என்ற அளவிலேயே இருந்தது. எங்களது பேட்டிங் வரிசை நன்றாகச் செயல்பட்டு வருகிறது. சில முக்கிய தருணங்களைச் சரியாகக் கையாள்வதில் கவனம் செலுத்துவோம். காயத்தில் இருந்து மீண்ட டிவால்ட் பிரெவிஸ் அணிக்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேட் ஹென்றிக்குப் பதிலாக குர்ஜப்னீத் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தோனி இன்னும் முழுமையாகத் தயாராகாததால் ஹோட்டலில் இருந்தே போட்டியைப் பார்க்கிறார், அவர் விரைவில் ஆடுவார் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

சென்னை அணியைப் பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதல் புள்ளிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. மறுபுறம், டெல்லி அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், டிவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி: கே.எல்.ராகுல், பதும் நிசங்கா, சமீர் ரிஸ்வி, அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், ஆக்விப் நபி, லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ், நடராஜன், முகேஷ் குமார்.

டெல்லி கேபிட்டல்ஸ் இம்பாக்ட் வீரர்கள் விப்ராஜ் நிகம், அசுதோஷ் சர்மா, கருண் நாயர், துஷ்மந்த சமீரா, நிதிஷ் ராணா

சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன், கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி

Story first published: Saturday, April 11, 2026, 19:14 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+