Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: டாஸ், பிளேயிங் 11.. தோனி ஆடுகிறாரா? சிஎஸ்கே எடுத்த முடிவு இதுதான்

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச உள்ளது. இந்தப் போட்டியில் தோனி பங்கேற்கவில்லை.

CSK vs DC Toss Playing XI Impact Sub and Pitch conditions Is Dhoni playing this match

டெல்லி அணியைப் பொறுத்தவரை, ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிவதாலும், போட்டியின் இரண்டாவது பாதியில் பிட்ச் சற்று மெதுவாக மாற வாய்ப்புள்ளதாலும் முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்துள்ளதாக அக்சர் படேல் தெரிவித்தார்.

இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் தங்கள் அணி பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் சாதகம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புள்ளிப்பட்டியலைப் பற்றி அதிகம் யோசித்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளாமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தங்கள் அணி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த போட்டியில் டெல்லி அணியில் ஒரு முக்கிய மாற்றமாக, கைல் ஜாமிசனுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறம் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், தானும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகக் குறிப்பிட்டார். ஆடுகளம் சற்று வறண்டு காணப்படுவதால், இரண்டாவதாகப் பந்துவீசும் போது பந்துவீச்சாளர்களுக்குக் கூடுதல் சாதகம் கிடைக்கும் என அவர் கூறினார். கடந்த சில போட்டிகளில் சிஎஸ்கே அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு நிர்வாகத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றி வருவது அணிக்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தொடரின் முக்கியமான இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், வெற்றியைத் தொடரத் தங்கள் அணி தீவிரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ராமகிருஷ்ண கோஷ் காயமடைந்ததால் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அகீல் ஹொசைன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்றார் ருதுராஜ்.

IPL 2026: சிஎஸ்கே அணியில் இந்த தவறை செய்யாதீங்க.. முன்னாள் ஆல்ரவுண்டர் கருத்து

IPL 2026: சிஎஸ்கே அணியில் இந்த தவறை செய்யாதீங்க.. முன்னாள் ஆல்ரவுண்டர் கருத்து

டெல்லி மைதானத்தில் மாலை நேரத்தில் நிலவும் வறண்ட காலநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பந்துவீச்சாளர்கள் இன்று ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதால், இந்த போட்டியின் வெற்றி பிளே ஆப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக அமையும்.

அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் XI):சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஊர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, குர்ஜப்னீத் சிங்.

டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் XI):கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசங்கா, கருண் நாயர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், நிதிஷ் ராணா, அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், லுங்கி என்கிடி, டி. நடராஜன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்ஸ்: சிவம் துபே, பிரசாந்த் வீர், மேத்யூ ஷார்ட், ஆகாஷ் மத்வால், சர்பராஸ் கான்.

டெல்லி கேபிடல்ஸ் - இம்பாக்ட் சப்ஸ்டிடியூட்ஸ்: விப்ராஜ் நிகாம், சமீர் ரிஸ்வி, அபிஷேக் போரல், ஆகிப் நபி தார், டேவிட் மில்லர்.

Story first published: Tuesday, May 5, 2026, 19:09 [IST]
Other articles published on May 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+