Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024: உன்னை நம்புனதுக்கு.. நொந்து போன பிளெம்மிங்.. சீனியர் வீரரால் சிஎஸ்கே அணி வீழ்ச்சி

அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைக்கு முக்கிய காரணமே இந்த தொடர் முழுவதும் சிஎஸ்கே அணியின் துவக்கம் மோசமாக அமைந்தது தான். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் மிகக் குறைவான சிக்ஸ் அடித்த அணி சிஎஸ்கே தான். அதேபோல முதல் விக்கெட்டுக்கு மிக குறைவான ரன்கள் சேர்த்த அணிகளில் சிஎஸ்கே அணி தான் முதல் இடத்தில் உள்ளது.

CSK vs GT IPL 2024 Ajinkya Rahane failed badly as opener for CSK


இந்த ஆண்டு இதுவரை ஆடிய 12 போட்டிகளில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்கள் கூட்டணியாக 268 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இதன் சராசரி 22 மட்டுமே. இதன் ரன் ரேட் 7.73 ஆகும். இரண்டு முறை மட்டுமே சிஎஸ்கே துவக்கக் கூட்டணி 50 ரன்களை தாண்டி உள்ளது.

மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது சிஎஸ்கே அணி தான் மிக மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே காயத்தால் விலகி இருப்பதுதான் இந்த நிலைக்கு முக்கிய காரணம். கடந்த ஆண்டு டெவான் கான்வே - ருதுராஜ் ஜோடி சிஎஸ்கே அணிக்கு அபாரமான துவக்கத்தை அளித்தது. அதன் காரணமாகவே சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்றது.

இந்த ஆண்டு கான்வே காயத்தால் விலகிய நிலையில், சிஎஸ்கே அணி சரியான துவக்க ஜோடியை கண்டறிய முடியாமல் திணறி வருகிறது. இதுவரை ரச்சின் ரவீந்தரா, அஜின்க்யா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய மூவரும் மாற்றி மாற்றி துவக்க வீரர்களாக இருந்துள்ளனர். இந்த மூவரில் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே துவக்க வீரராக அதிக ரன்களை சேர்த்துள்ளார். ரஹானே அதிக போட்டிகளில் துவக்க வீரராக ஆடியும் மிக மோசமாக செயல்பட்டு நிதானமாக ரன் சேர்த்ததுடன் விரைவாக விக்கெட்டை இழந்து இருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் 5 பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் மற்றொரு துவக்க வீரரான ரச்சின் ரவீந்தராவையும் ரன் அவுட் செய்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சரியான துவக்க ஜோடியை கண்டறிய முடியாமல் திணறி வருகிறார். ரஹானே மூத்த வீரர் என்பதால் அவரை நம்பி தொடர்ந்து அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பளித்து வந்தார். ஆனால் ரஹானே சிஎஸ்கே அணியை ஏமாற்றி விட்டார்.

Story first published: Saturday, May 11, 2024, 9:50 [IST]
Other articles published on May 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+