Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs GT: சஞ்சு சாம்சனுக்கு காத்திருக்கும் 2 சவால்.. இவர்களை சமாளித்தால் போதும், வெற்றி உறுதி

சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். நடப்பு சீசனில் அவர் 2 சதம் அடித்துள்ள நிலையில், அந்த 2 போட்டியிலும் சிஎஸ்கே வென்றுள்ளது. சாம்சன் விரைவில் ஆட்டமிழந்தால் அது சிஎஸ்கேக்கு பின்னடைவை தருகிறது.

இந்த சூழலில் குஜராத் அணியில் உள்ள குறிப்பிட்ட 2 பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் திணறி இருப்பது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் புள்ளிவிவரங்கள் குஜராத்துக்கு சாதகமாக அமைவதும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது. அது என்ன வென்று தற்போது பார்க்கலாம்.

சஞ்சு சாம்சனுக்கு எதிராக ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மிகவும் சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார். சிராஜின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சாம்சன் சில நேரங்களில் சிரமப்படுகிறார். இதுவரை சிராஜ் வீசிய 35 பந்துகளில் சாம்சன் வெறும் 40 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

மிக முக்கியமாக, சிராஜ் அவரை மூன்று முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பவர்-பிளே ஓவர்களில் சிராஜின் இந்தச் செயல்திறன், சாம்சனை விரைவாகக் கட்டுப்படுத்தினால் குஜராத்துக்கு பெரிய பலமாக மாறிவிடும். இதை சாம்சன் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதில் பொருட்டே சிஎஸ்கேவின் பேட்டிங் உள்ளது.

இதே போன்று உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரஷித் கானுக்கு எதிராக சாம்சனின் புள்ளிவிவரங்கள் சற்று மாறுபட்டு உள்ளன. டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானிடம் சாம்சன் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார் என்பது ஒரு நல்ல அறிகுறி என்றாலும், ரன் சேகரிப்பதில் அவர் பெரும் போராட்டத்தைச் சந்திக்கிறார்.

ரஷித் கானுக்கு எதிராக சாம்சன் இதுவரை 108 பந்துகளை எதிர்கொண்டு 121 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் வெறும் 112.03 மட்டுமே. இது டி20 கிரிக்கெட்டின் வேகத்திற்கு சற்றும் பொருந்தாத மெதுவான ஆட்டமாகும். சாம்சன் போன்ற அதிரடி வீரர், ரஷித் கானின் பந்துவீச்சில் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் சிங்கிள்களை மட்டுமே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது எதிரணிக்கு ஒரு சிறந்த உத்தியாக அமைகிறது.

இந்த புள்ளிவிவரங்கள் சஞ்சு சாம்சனுக்கு வரும் போட்டிகளில் ஒரு பெரிய சவாலாக இருக்கும். சிராஜின் வேகம் மற்றும் ரஷித் கானின் சுழல் வலையிலிருந்து சாம்சன் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதே சிஎஸ்கேவின் வெற்றிக்கு மிக முக்கியமானது. இதனால் தான் இன்றைய ஆட்டத்தில் சாம்சனுக்கு உறுதுணையாக ருதுராஜ், பிரவீஸ், சர்பராஸ் கான், சிவம் துபே ஆகியோர் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும்.

Story first published: Sunday, April 26, 2026, 13:39 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+