Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: இனியும் பொறுக்க முடியாது.. கடுப்பேற்றிய சர்ஃபராஸ்.. சிஎஸ்கே பிளேயிங் 11-உள்ளே வரும் தோனி?

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவரது தொடர் சொதப்பலால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில், இன்னும் சிஎஸ்கே அணியின் சமநிலையை கெடுக்கக் கூடாது என வெளியே அமர்ந்திருக்கும் தோனி, அணியின் நலன் கருதி மீண்டும் ஆடும் லெவனில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வெற்றி கட்டாயம் என்ற நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே விளையாடியது. இதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இந்த சீசனில் அவர் 8 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 161 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 23.00 ஆக உள்ளது. ஒரு அரைசதம் உட்பட 23 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடித்திருந்தாலும், ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு தேவையான நிலைத்தன்மை அவரிடம் துளியும் இல்லை.

CSK vs GT Will MS Dhoni replace Sarfaraaz Khan Sarfaraz Khan gone for golden Duck vs Gujarat Titans

ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் சர்ஃபராஸ் கானின் புள்ளிவிவரங்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதுவரை 58 போட்டிகளில் 44 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர், ஒட்டுமொத்தமாக 746 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த சராசரி 22.60 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 137.38 ஆகவும் உள்ளது. உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் ரன் குவிக்கும் அவர், அதிரடி ரன் குவிப்பு தேவைப்படும் ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து தடுமாறி வருவது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

சர்ஃபராஸ் கானின் இந்த மோசமான ஆட்டம் சிஎஸ்கே அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காயம் காரணமாக சில போட்டிகளில் விலகியிருந்த தோனி, தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளார். பிட்னஸ் டெஸ்டிலும் அவர் தேர்ச்சி பெற்று விட்டார். ஆனாலும், வெற்றி பெற்று வரும் அணியின் சமநிலையை கெடுக்க விரும்பாத அவர், பிளேயிங் 11 அணியில் இடம்பெறாமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தானாகவே வெளியே அமர்ந்துள்ளார்.

CSK: “யார் போனா என்ன.. சிஎஸ்கே-வுக்காக நான் நிப்பேன்”.. கெத்து காட்டி நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ்!

CSK: “யார் போனா என்ன.. சிஎஸ்கே-வுக்காக நான் நிப்பேன்”.. கெத்து காட்டி நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ்!

ஆனால், பிளே ஆப் பந்தயம் சூடுபிடித்துள்ள இந்த நெருக்கடியான கட்டத்தில், தொடர்ச்சியாக சொதப்பும் சர்ஃபராஸ் கானை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தோனி மீண்டும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அணியின் நலனுக்காக தன்னைத்தானே ஓரங்கட்டிக்கொண்ட தோனி, தற்போது அணியின் மிடில் ஆர்டர் சரிவை சரிசெய்ய மீண்டும் பேட்டை கையில் எடுப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Sunday, April 26, 2026, 17:52 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+