CSK vs KKR: இந்த வெற்றி ஒன்றும் மேஜிக் கிடையாது.. கடுமையாக உழைத்தோம்.. சிஎஸ்கே வீரர் அகில் ஹொசைன்
சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் பின்னுக்குத் தள்ளி சிஎஸ்கே அணி எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு தொடர் தோல்வியை சிஎஸ்கே அணி தழுவிய நிலையில், தற்போது அடுத்தடுத்து வெற்றியை பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகில் ஹொசைன் முக்கிய காரணமாக இருந்தார். பந்துவீச்சு அகில் ஹொசைன் நான்கு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி மட்டுமே 26 ரன்கள் மட்டும் தான் விட்டுக் கொடுத்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் உண்மையிலே பேட்ஸ்மேன் பவுலர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒன்று சாதகமாக செயல்பட்ட ஆடுகளத்தில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆடுகளம் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் கிடையாது. இந்த ஆடுகளத்தில் என்னென்ன கிடைத்ததோ அதை அனைத்தையுமே நாங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டோம்.
இந்த ஆடுகளத்தில் பவுலர்களுக்கு என கொஞ்சம் இருந்தது. அதை பயன்படுத்தி என்னுடைய இயல்பான பந்தில் வேகத்தை மாற்றி பந்து வீசினேன். குறிப்பாக நான் என்னுடைய பந்துகள் அனைத்தையும் ஸ்டெம்பை நோக்கி வீசினேன். சில பந்துகளை மெதுவாக வீசினேன். நான் நூர் அகமதின் செயல்பாட்டிற்காக மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
ஏனென்றால் கடந்த சில போட்டிகளாக அவர் பந்துவீச்சில் தடுமாறினார். தற்போது அவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் அவர் மீண்டும் நம்பிக்கையை பெற்று இருக்கின்றார். கிரிக்கெட் போட்டியில் எப்போதுமே 170 லிருந்து 190 வரை இலக்கு இருந்தால் நிச்சயம் அந்த போட்டி பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கும்.
இன்றைய நாளில் நாங்கள் எளிதாக ஒன்றும் வெற்றி பெறவில்லை. கடுமையாக உழைத்தோம். எங்களுடைய வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்தோம். இது உண்மையிலேயே மேஜிக் கிடையாது.எங்களுடைய உழைப்பாள்தான் இந்த வெற்றி கிடைத்தது என அகில் ஹொசைன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications