Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சொன்னது நடந்துச்சா.. நான் அடிக்கும் போது கம்முனு இருப்பாருனு" அதிர வைக்கும் சிஎஸ்கே மீம்ஸ்!

கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

விறகு படத்தில் வட்டிக் கேட்டு டார்ச்சர் செய்யும் நபரை வடிவேலு, டேய்.. அவரை எப்ப அடிக்கணும்னு எனக்கு தெரியும்டா.. என்பார். அதற்கு என்னடா சொல்றா? என்று கேட்க, ஆமாணே.. நான் அடிக்கும் போது நீங்க பேசவே மாட்டிங்க என்று பதில் அளிப்பார். இறுதியாக அந்த நபர் இறந்த பின், "நான் சொன்னது நடந்துச்சா.. நடந்துச்சா" என்று அடிப்பார். இதில் வரும் வடிவேலுவாக சிஎஸ்கே அணியையும், டார்ச்சர் செய்யும் நபராக கேகேஆர் அணியையும் மாற்றி, பிளே ஆஃப் வாய்ப்புக்கு கிட்டத்த முடிவு கட்டியதை வைத்து, "நான் சொன்னது நடந்துச்சா.. நடந்துச்சா.." என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா சிஎஸ்கே ரகம்.

ipl 2025 memes ms dhoni

சச்சின் படத்தில் தலைவாசல் விஜயிடம் நடிகர் விஜய், "அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை சார்.. முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களை சிரிக்க வைப்போம்" என்று சொல்வார். அதில் வரும் விஜயாக சிஎஸ்கே அணியை மாற்றி, "அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கைங்க சார்.. முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்க குடிய கெடுப்போம்" என்று கேகேஆர் பிளே ஆஃப் சான்ஸை முடித்துவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இவ்வளவு வன்மம் ஆகாதுப்பா ரகம்.

ipl 2025 memes ms dhoni

குஸ்தி படத்தில் சாம்புராணி போடும் பாய் வேடத்தில் வரும் வடிவேலு, நடிகர் தியாகுவின் கடைசி கொளுத்துவிடுவார். அப்போது தியாகு, "நல்லா கருப்பா ஒருத்தன் வந்தான் சார்.. சாம்புராணி போடவானு கேட்டான் சார்.. மொத்த கடையையும் கொளுத்திட்டான் சார்" என்று சொல்வார். அதனை அப்படியே தியாகுவாக கேகேஆர் அணியை மாற்றி, "மாற்று வீரர்கள்னு சொல்லி முழுசா ரவுடி பயலுகளை இறக்கி வச்சிருக்காங்க சார்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என் சோகக் கதையை கேளு தாய்குலமே ரகம்.

ipl 2025 memes ms dhoni

போக்கிரி படத்தில் குருவின் இடத்திற்கு சென்று அவரின் அடியாளையே விஜய் அடிப்பார். அப்போது விஜய், "எனக்கு பயம் இல்லை.. அதுக்கு இதுதான் சாம்பிள்" என்று மாஸ் பஞ்ச் டயலாக் சொல்வார். அதனை அப்படியே விஜயாக உர்வில் படேலை மாற்றி, "எனக்கு பயம் கிடையாது.. அதுக்கு இதான் சாம்பிள்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் திரையரங்கும் சிதறிய ரகம்.

ipl 2025 memes ms dhoni

லப்பர் பந்து படத்தில் இறுதிப்போட்டி சிக்சர் அடிக்கும் தினேஷ் பார்த்த பின், எதிரணி கேப்டனுக்கு பழைய நினைவு வரும். அதனை அப்படியே தோனிக்கு மாற்றி, கடைசி ஓவரில் அடித்த சிக்சரின் போது 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாறு கண்முன் வருவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ரகம்.

ipl 2025 memes ms dhoni
Story first published: Thursday, May 8, 2025, 10:52 [IST]
Other articles published on May 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+