டாட் பால் மன்னன்.. பவர்பிளே நாயகன்.. 10 ஆண்டு சாதனையை முறியடித்த தோனியின் செல்லப் பிள்ளை!!
Recommended Video

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக மாறி இருக்கும் தீபக் சாஹர், ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை செய்தார்.
தீபக் சாஹர் சென்னை அணியின் பவர்பிளே ஓவர்களில் நிறைய டாட் பால் வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி வருகிறார். கொல்கத்தா போட்டியிலும் சிறப்பாக பந்து வீசிய சாஹர் ஒரே ஐபிஎல் போட்டியில் அதிக டாட் பால் வீசிய சாதனையை முறியடித்தார்.
ஆத்தா.. காளியம்மா.. ஆஹா.. சு. பொன்னுத்தாய்க்கு சாமி வந்துருச்சே.. பரபரத்த சிவகிரி!

20 டாட் பால்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். தன் பந்துவீச்சில் 20 டாட் பால் வீசினார். இதன் மூலம் நெஹ்ரா, முனாப் பட்டேல் சாதனையை முறியடித்தார் சாஹர்.

10 ஆண்டு சாதனை
2009 ஐபிஎல் தொடரில் நெஹ்ரா மற்றும் முனாப் பட்டேல், இருவரும் ஒரே போட்டியில் 19 டாட் பால் வீசி இருந்தனர். சுமார் 10 ஆண்டுகள் வரை யாராலும் முறியடிக்க முடியாத இந்த சாதனையை தீபக் சாஹர் கொல்கத்தா போட்டியில் முறியடித்து அசத்தியுள்ளார்.

இந்த சீசனில்..
இந்த ஒரு போட்டியில் மட்டுமின்றி 2019 ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக டாட் பால் வீசிய வீரர்களில் முதல் இடத்தை பெற்றுள்ளார் சாஹர். 6 போட்டிகளில் 73 டாட் பால் வீசி உள்ளார் அவர். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரஷித் கான் 65 டாட் பால் வீசியுள்ளார்.

விக்கெட்கள்
தீபக் சாஹர் இதுவரை 8 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். சென்னை அணியில் தோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறி உள்ளார். பவர்பிளே ஓவர்களில் தோனி தன் "செல்லப்பிள்ளை" போல இவரைத்தான் பந்து வீசச் செய்து வருகிறார்.

எதிர்பார்ப்பு
இந்த தொடருக்கு முன் சாஹர் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், சாஹர் தன் சிறப்பான பந்துவீச்சால் தன் மீது எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications