Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்பஜன், இம்ரான் தாஹிர்.. 2 பேரும் சரக்கு மாதிரி.. தோனி ஏன் இப்படி சொன்னாரு?

Recommended Video

IPL 2019: Chennai vs Kolkata | ஹர்பஜன், இம்ரான் தாஹிர் பற்றி தோனி என்ன சொன்னார்- வீடியோ

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் ஆடி, ஐந்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த வெற்றியில் பெரும் பங்கு சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்களையே சாரும். அதிலும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஒருவரும் தங்கள் அனுபவத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வருகின்றனர்.

கலக்கல் பந்துவீச்சு

கலக்கல் பந்துவீச்சு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹர்பஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினார். இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார்.

மது

மது

இவர்களது சிறப்பான பந்துவீச்சை அடுத்து, போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, "வயது அவர்கள் பக்கம் உள்ளது. அவர்கள் மதுவைப் (wine) போல, முதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். ஹர்பஜன் தான் ஆடிய போட்டியில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டார்" என்று குறிப்பிட்டு கூறினார்.

வயது

வயது

ஹர்பஜன் சிங்கிற்கு 38 வயதும், இம்ரான் தாஹிருக்கு 40 வயதும் ஆகிறது. இருந்தாலும், இருவரும் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதைத் தான் தோனி, மது போல நாளாக, நாளாக திறமை வளர்ந்து வருகிறது என கூறியுள்ளார்.

எதிரணிகள் திண்டாட்டம்

எதிரணிகள் திண்டாட்டம்

2019 ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் 4 போட்டிகளில் 7 விக்கெட்கள் எடுத்துள்ளார். இம்ரான் தாஹிர் 6 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக சென்னை ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதால், எதிரணிகள் ஹர்பஜன் - தாஹிர் சுழலில் சிக்கி தவித்து வருகின்றனர். கொல்கத்தா அணி 108 ரன்களிலும், பெங்களூர் அணி 70 ரன்களிலும் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 10, 2019, 11:18 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+