Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆயுஷ் மத்ரே அவுட்டானவுடன் ரன் ரேட் காலி.. 200ஐ தாண்டாத சிஎஸ்கே .. பவுலிங்கில் சமாளித்த KKR

சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்கியா ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே ஆடிய போது சிஎஸ்கே அணி 220 ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் ஆட்டமிழந்த பின் சிஎஸ்கே அணியின் ரன் குவிக்கும் வேகம் சரிந்தது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்தப் போட்டியிலும் அவர் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நடப்பு தொடரில் அவர் விளையாடிய 5 போட்டிகளில் முறையே 6, 28, 7, 15, 7 என மொத்தம் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

IPL 2026 Ayush Mhatre s Blitz and Sanju Samson s Knock Propel CSK to 192 5 Against KKR

கேப்டன் சொதப்பினாலும், இளம் வீரர் ஆயுஷ் மத்ரே கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தார். ஆயுஷ் மத்ரே வெறும் 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இவரது ஸ்டிரைக் ரேட் 223 ஆக இருந்தது.

பவர்பிளேவுக்கு பின் மீண்ட கொல்கத்தா:

மத்ரேவின் அதிரடியால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்து பலமாக இருந்தது. ஆனால் மத்ரே ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரைன் மற்றும் அனுகுல் ராய் தலா 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

சஞ்சு சாம்சன் 48 ரன்களும், டெவால்ட் பிரெவிஸ் 41 ரன்களும் எடுத்து அணியை ஓரளவு மீட்டனர். ஆனால், ஆயுஷ் மத்ரே இருந்தபோது ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் இருந்த ரன் ரேட் பின்னர் சரிந்தது. கடைசி நேரத்தில் சிவம் துபே மற்றும் ஜேமி ஓவர்டன் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

சிவம் துபே 12 பந்துகளில் 13 ரன்களும், ஒவர்டன் 6 பந்துகளில் 7 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இறுதியில் சிஎஸ்கே அணி 192 ரன்கள் எடுத்தது. 200 ரன்களை கூட தாண்டவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைபவ் அரோரா 4 ஓவர்களில் 55 ரன்களை வாரி வழங்கினார்.

Story first published: Tuesday, April 14, 2026, 21:32 [IST]
Other articles published on Apr 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+