Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: தமிழ் மக்கள் ரொம்ப நல்லவங்க! தோற்றாலும் ஆறுதல் சொன்னாங்க.. RCB பேன்ஸ் தான் வொர்ஸ்ட்- KKR ரசிகர்கள்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றி மூன்று தோல்வியுடன் 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுக்க கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டதாக கொல்கத்தா ரசிகர்கள் பாராட்டி இருப்பது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிஎஸ்கே ரசிகர்கள் தங்களை அன்புடன் வரவேற்றதாகவும் போட்டியில் கொல்கத்தா அணி தோற்றாலும், தங்களை கிண்டல் செய்யாமல் ஆறுதல் கூறியதாகவும் கொல்கத்தா ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே கே ஆர் ரசிகர் ஒருவர், சென்னை மக்கள் மிகவும் அன்பானவர்கள்.

உண்மையிலேயே அவர்கள் நல்லவர்கள். எங்களிடம் மிகவும் பாசமாக நடந்து கொண்டார்கள். நாங்கள் போட்டியில் தோற்றாலும் எங்களிடம் வந்து நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயம் உங்கள் அணி அடுத்தடுத்த போட்டியில் வெற்றி பெறும் என்று ஆறுதல் கூறினார்கள். ஆனால் மற்ற ஊரில் இப்படி நடந்ததே கிடையாது.

குறிப்பாக rcb ரசிகர்கள் பெங்களூருவில் எங்களிடம் கிண்டல் செய்வார்கள். எங்களை அடிக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் வெற்றி பெற்றால் கூட எங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வார்கள் சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து ஆர்சிபி ரசிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு கொல்கத்தா ரசிகர் அளித்த பேட்டியில், நாங்கள் சென்னையில் வந்து போட்டியை பார்த்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாக செல்கின்றோம்.

ஏனென்றால் நாங்கள் தோற்றால் கூட சிஎஸ்கே ரசிகர்கள் எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். ஆனால் ஆர் சி பி ரசிகர்கள் அப்படி அல்ல எங்களிடம் ஆர் சி பி ரசிகர்கள் பெங்களூருவில் அடாவடி செய்வார்கள். ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் உண்மையிலேயே எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Wednesday, April 15, 2026, 11:09 [IST]
Other articles published on Apr 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+