Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: முதல்முறையாக சிஎஸ்கே-வுக்கு இப்படி ஒரு வாய்ப்பு.. வெற்றி உறுதி.. அஸ்வின் அதிரடி கணிப்பு

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி, கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மறுபுறம், கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவித்து வருகிறது.

CSK vs KKR IPL 2026 Ravichandran Ashwin Predicts Victory for Chennai Super Kings at Chepauk

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "இந்த சீசனில் முதல் முறையாக சிஎஸ்கே அணி 'பேவரிட்' ஆக அதாவது வெற்றி பெறும் அணி என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தாவையும், அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணியையும் வீழ்த்தினால், புள்ளிப்பட்டியலில் ஏற்படும் நெருக்கடியிலிருந்து சிஎஸ்கே அணியால் தப்பிக்க முடியும்.

பவர்பிளே ஓவர்களில் கொல்கத்தா அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து நெருக்கடி கொடுத்தால் தவிர, மற்றபடி இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு பெரிய சவால் இருக்காது. டெல்லி அணிக்கு எதிரான வெற்றியில் சிஎஸ்கே அணி தனக்கான சரியான ஆடும் லெவனைக் கண்டறிந்துவிட்டது. கடந்த போட்டியில் அகீல் ஹொசைன் செயல்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. அதேசமயம் உள்ளூர் போட்டிகளில் கலக்கிய ஸ்ரேயாஸ் கோபாலையும் அணியில் பரிசீலிக்கலாம்.

இந்தப் போட்டிக்கான ஆடுகளம் சிவப்பு மண் ஆடுகளமாக இருந்தால், டெல்லிக்கு எதிராகக் களமிறங்கிய அதே அணியுடன் சென்னை விளையாடலாம். ஒருவேளை அது கறுப்பு மண் ஆடுகளமாக இருந்தால், கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் சிந்திக்க வேண்டும்" என அஸ்வின் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 115 ரன்கள் குவித்து இமாலய சதம் அடித்தார். ஆயுஷ் மத்ரேவும் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன் 4 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி அணியை 189 ரன்களுக்குச் சுருட்டி சிஎஸ்கே-வுக்கு முதல் வெற்றியைத் தேடித் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 14, 2026, 18:38 [IST]
Other articles published on Apr 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+