Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: தோனி அணிக்குள் வந்தால், சர்பராஸ் கான் தான் வெளியே செல்வார்.. முன்னாள் வீரர் கருத்து

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில்n தோனியின் வருகை குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதியாக இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக 44 வயதான தோனி, இந்த சீசனின் முதல் நான்கு போட்டிகளில் விளையாடவில்லை.

தோனி இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ள சிஎஸ்கே, புள்ளிப் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

தோனியின் வருகைத் தேதி குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத். "தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக திரும்புவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. அவர் பேட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார், ஆனால் அணி நிர்வாகத்திற்கே அவருடைய வருகை குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று ஸ்ரீதரன் ஸ்ரீராம் என்னிடம் கூறினார்.

தோனியின் உடல்நிலை தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோனி தனது மீது கவனம் குவியாமல் இருக்க, மைதானத்திற்கு வருவதில்லை. அவர் யாருக்குப் பதிலாக வருவார் என்பது பெரிய கேள்விக்குறி. அனால், சர்பராஸ் கான் பதிலாக வேறுவழியில்லை," என்றார் அவர்.

"தோனி வந்தவுடன், அவர்தான் கீப்பர். சஞ்சு சாம்சன் ஃபீல்டராக களமிறங்குவார். இதனால், ஓர் இந்திய பேட்ஸ்மேன் நீக்கப்பட வேண்டும், அது சர்பராஸாகத்தான் இருக்கும். அணி சமநிலை பெற்றதாகத் தோன்றும் இந்த நிலையில், தோனி யாருக்குப் பதிலாக வருவார் என்பதில் குழப்பம் நிலவுகிறது," என்றும் பத்ரிநாத் விளக்கினார்.

சர்பராஸ் கான் மூன்று இன்னிங்ஸ்களில் 33 சராசரியில் மற்றும் 202-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 99 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், முன்னாள் வீரர் பத்ரிநாத், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடின் மெதுவான பேட்டிங்கை விமர்சித்தார். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான வெற்றிப் போட்டியில், கெய்க்வாட் 18 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தது மெதுவாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.

அந்தப் போட்டியில், சஞ்சு சாம்சன் ஒரு முனையில் 56 பந்துகளில் அதிரடியாக 115* ரன்கள் குவித்தார். மேலும், கெய்க்வாட் விக்கெட்டுக்கு பிறகு வந்த ஆயுஷ் மகாத்ரேவும் 36 பந்துகளில் விரைவாக 59 ரன்கள் சேர்த்திருந்தார்.

"மற்ற அணிகள் பவர் ப்ளேயில் சிஎஸ்கேவை விட வேறு வேகத்தில் பேட்டிங் செய்கின்றன. ஆனாலும், அவர்கள் தொடக்க ஜோடியை மாற்ற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், பொதுவாக அவர்கள் அதிகம் மாற்றுவதில்லை, குறிப்பாக ஒரு வெற்றிக்குப் பிறகு நிச்சயம் மாற்ற மாட்டார்கள்," என்று பத்ரிநாத் குறிப்பிட்டார்.

மேலும், "ருதுராஜுக்குப் பலனளித்தது என்னவென்றால், டாப் ஆர்டரில் மற்ற இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவருடைய கேப்டன்சி மிகச் சிறப்பாக இருந்தது, அவர் சில நல்ல மாற்றங்களைச் செய்தார்," என்று பத்ரிநாத் கூறினார்.

ஸ்ரீதரன் ஸ்ரீராம், மைக்கேல் ஹசி மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங் போன்றவர்கள் அவருடன் அமர்ந்து பேசியிருப்பார்கள். யாருக்கு எப்போது பந்து வீச வேண்டும் என்பதற்கான துல்லியமான திட்டங்களை அவர்கள் அவருக்குத் தெரிவித்திருக்கலாம். ஒவ்வொரு கட்டத்திற்கும் குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கான திட்டத்தை அவர்கள் அளித்திருக்கலாம். அவர் அதைப் பின்பற்றியது பாராட்டத்தக்கது," என்றார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்கு முன், சிஎஸ்கே கேப்டனாக கெய்க்வாட் தொடர்ந்து ஏழு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருந்தார். ஏப்ரல் 14 அன்று சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக அடுத்த வெற்றியைப் பதிவு செய்ய 'சிஎஸ்கே காத்திருக்கிறது.

Story first published: Tuesday, April 14, 2026, 7:00 [IST]
Other articles published on Apr 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+