இனி ஆப் மூலம் ஐபிஎல் டிக்கெட் பெறலாம்.. சிஎஸ்கே - கொல்கத்தா போட்டி.. ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஏற்பாடு
மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை முதல் ( மார்ச் 26 ) தொடங்கவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிகள்
கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மும்பை, புனே நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கு பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர். எனினும் அவற்றின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தன.

டிக்கெட் விற்பனைகள்
இந்நிலையில் சிஎஸ்கே - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், வான்கடே மைதானத்தில் 25 % அளவிற்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். சிஎஸ்கே போட்டி என்பதால் டிக்கெட்டை பெற ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் பல்வேறு ஸ்பெஷல் ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது.

புது செயலி
அதாவது இந்த முறை பிரபல டிக்கெட் புக்கிங் செயலியான புக் மை ஷோ ( Book my show ) மூலமாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கொரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ரசிகர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகளை பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஐபிஎல் வலைதளப்பக்கத்திலும் நேரடியாக டிக்கெட்டுகளை பெறலாம்.
Recommended Video

நேரடி விற்பனை
டிக்கெட் பெற விரும்புவோர் முதலில் தங்களது ப்ரவுசரில் இருந்து https://www.iplt20.com/ வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள மெனு பட்டனில் Buy option என்ற தேர்வை கொடுத்தால், எந்தப் போட்டிக்கு, தேவை, எத்தனை டிக்கெட்டுகள் தேவை போன்ற முழு விவரங்களையும் பதிவிட்டு, பின்னர் ஆன்லைன் மூலமே பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications