Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2022: சிஎஸ்கே vs கொல்கத்தா.. டாஸ் வென்றால் பேட்டிங் எடுக்கலாமா? வான்கடே பிட்ச் ரிப்போர்ட் இதோ!

மும்பை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளுமே கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதின. அதில் பெற்ற தோல்விக்கு கொல்கத்தா பதிலடி கொடுக்க காத்துள்ளது.

புதிய கேப்டன்கள்

புதிய கேப்டன்கள்

சென்னை அணிக்கு ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் என புதிய கேப்டன்களின் வழிகாட்டுதலில் களமிறங்குகின்றனர். இருவருக்குமே முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடங்க வேண்டும். இதற்காக வான்கடேவில் அட்டகாசமான பிட்ச்-ஐ பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட் என்ன

பிட்ச் ரிப்போர்ட் என்ன

வான்கடே மைதானம் அதிக ஸ்கோர் அடிக்ககூடிய பேட்டிங் டிராக் ஆகும். இங்கு அவுட் ஃபீல்டும் ( களத்தின் தன்மை ) வரண்டிருக்கும் என்பதால் மிக வேகமாக பவுண்டரிகள் சென்றுவிடும். இதுஒருபுறம் இருக்க, இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சு தான் பெரியளவில் எடுபடும். குறிப்பாக நல்ல பவுன்ஸர்களை எதிர்பார்க்கலாம்.

டாஸில் தான் ஆட்டமே

டாஸில் தான் ஆட்டமே

இங்கு டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பவுலிங்கை தேர்வு செய்வது தான் நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 9 மணிக்கு மேல் 2வதாக பவுலிங் செய்யும் அணிக்கு சிரமமாக இருக்கும். சிஎஸ்கேவும் கடந்த காலங்களில் இதனை சரியாக கணித்து விளையாடி வந்துள்ளது.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil
மைதான ரெக்கார்ட்

மைதான ரெக்கார்ட்

இதுவரை இந்த மைதானத்தில் 83 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 40 முறை முதலில் பேட்டிங் செய்யும் அணியும், 43 முறை 2வது பேட்டிங் செய்யும் அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோர் 180 வரை உள்ளது. இங்கு அதிகபட்சமாக 198 ரன்கள் இலக்கு வரை சேஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 26, 2022, 16:06 [IST]
Other articles published on Mar 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+