Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கங்களுடன் மோதும் நைட் ரைடர்ஸ்... பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமா?

துபாய் : பரபரப்பான சூழலில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் இன்று மோதவுள்ளன.

இரண்டு வெற்றிகளுக்கு பிறகு கடந்த போட்டியில் தோல்வியுற்ற கேகேஆர் அணி மற்றும் 3 தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் சிறப்பான வெற்றியை தந்துள்ள சிஎஸ்கே இந்த போட்டியில் மோதுகின்றன.

அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பெற்ற வெற்றியை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

டெல்லி கேபிடல்சுடன் தோல்வி

டெல்லி கேபிடல்சுடன் தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வெற்றி பெற்ற நிலையில் கடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

சிஎஸ்கே -கேகேஆர் மோதல்

சிஎஸ்கே -கேகேஆர் மோதல்

இந்நிலையில் ஐபிஎல்லின் 21வது போட்டியில் இன்று அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் சிஎஸ்கே அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதவுள்ளது. கடந்த போட்டியில் தோல்வியுற்ற நிலையில் தற்போது சிஎஸ்கே உடனான போட்டியில் வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது.

விளாசிய மார்கன்

விளாசிய மார்கன்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் இலக்கான 229 ரன்களை துரத்தும் கடந்த போட்டியில், இயான் மார்கனை 6வது வீரராக களமிறக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அவர் 18 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். ஆயினும் இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நிலையில் மார்கனை முன்னதாக அனுப்பியிருந்தால் வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பேட்டிங்கிலும் திணறல்

பேட்டிங்கிலும் திணறல்

கேப்டனாக அணியை வழிநடத்துவதில் மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய திறமையில் சுணக்கத்தை காட்டி வருகிறார். கடந்த 4 போட்டிகளில் விளையாடி 37 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார். துவக்க வீரர் சுனில் நரேனும் சிறப்பாக விளையாடாத நிலையில், அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டிய கட்டாயம் கேகேஆருக்கு ஏற்பட்டுள்ளது.

சிறப்பான பௌலிங் யூனிட்

சிறப்பான பௌலிங் யூனிட்

சுனில் நரேனுக்கு பதிலாக இங்கிலாந்து வீரர் டாம் பான்டன், ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை அணிக்குள் கொண்டுவருவது குறித்து கேகேஆர் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அணியின் பௌலிங் யூனிட் சிறப்பாக உள்ளபோதிலும் பாட் கமின்ஸ் கடந்த 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து அணிக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறார்.

சிறப்பான வாட்சன்

சிறப்பான வாட்சன்

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான 10 விக்கெட்டுகள் வெற்றிக்கு பிறகு தற்போது இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. அணியின் டூ பிளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில், கடந்த போட்டியில் வாட்சனும் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 7, 2020, 13:24 [IST]
Other articles published on Oct 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+