Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லவேளை! தோனி ஸ்டம்ப்பில் அடிச்சும் ராகுல் அவுட் ஆகலை! இல்லைனா சிஎஸ்கே ஜெயிச்சுருக்க முடியுமா?

Recommended Video

IPL 2019: Chennai vs Punjab Dhoni bailes | ராகுல் அவுட் ஆகியிருந்தா சென்னை ஜெயிச்சுருக்க முடியுமா?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடந்த 18வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் பேட்டிங்கின் போது, தோனியின் ரன் அவுட் முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

1
45894

13வது ஓவரின் 4வது பந்தை வீசினார் ஜடேஜா. பேட்ஸ்மேன் ராகுல் பந்தை அடித்து விட்டு ரன் ஓட ஒரு அடி எடுத்து வைத்தார். ஆனால், பந்து மெதுவாக தோனிக்கு பக்கவாட்டில் சென்றது.

தோனி வேகம்

தோனி வேகம்

தோனி வேகமாக செயல்பட்டு, பந்தை எடுத்து ஸ்டம்ப்பை நோக்கி மின்னல் வேகத்தில் அடித்தார். பந்தும் ஸ்டம்பில் அடித்தது. ஆனால், பெயில்ஸ் கீழே விழவில்லை. இதற்குள், ராகுல் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைந்தார்.

அம்பயர் ரிவ்யூ

அம்பயர் ரிவ்யூ

பெயில்ஸ் கீழே விழாததால், தான் அவுட் இல்லை, அவுட் இல்லை என அம்பயரிடம் கூறினார் ராகுல். எனினும், அம்பயர் ரிவ்யூ பார்க்கக் கோரினார். ரீப்ளேவில் பெயில்ஸ் மேலே எழும்பவில்லை எனத் தெரிந்தது.

தப்பினார் ராகுல்

தப்பினார் ராகுல்

அதனால், நூலிழையில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பினார் ராகுல். தோனியிடம் தப்பிய ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால், பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் ராகுல் தான்.

பஞ்சாப் தோல்வி

பஞ்சாப் தோல்வி

ராகுலும், சர்ப்ராஸ் கானும் இணைந்து மிகப் பொறுமையாக ரன் சேர்த்து, கடைசி மூன்று ஓவர்களில் 46 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு அணியை எடுத்துச் என்றனர். எனினும், அவர்களால் ரன் ரேட் அழுத்தத்தை மீறி ரன் குவிக்க முடியவில்லை. அதனால், பஞ்சாப் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நல்லவேளை

நல்லவேளை

ஒருவேளை 13வது ஓவரில் தோனியின் ரன் அவுட்டில் ராகுல் வெளியேறி இருந்தால், டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்திருப்பார். எப்படியோ, பெயில்ஸ் கீழே விழாமல் போக, பஞ்சாப் வீரர் ராகுல் "செமயாக" பேட்டிங் ஆடி சென்னையை வெற்றி பெற வைத்து விட்டார்.

Story first published: Saturday, April 6, 2019, 23:08 [IST]
Other articles published on Apr 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+