கிறிஸ் கெயிலை சீக்கிரமா தூக்கணும்.. திட்டம் போட்டு வெற்றி பெற்ற தோனி - ஹர்பஜன் சிங்!
Recommended Video

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி 2019 ஐபிஎல் தொடரில் தன் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில் துவக்கத்திலேயே ஆட்டமிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. அவர் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்தியுள்ளனர் கேப்டன் தோனி மற்றும் ஹர்பஜன் சிங்.

தோனியின் திட்டம்
இந்தப் போட்டிக்கு பின் பேசிய தோனி, கிறிஸ் கெயில் அடிக்க ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்த முடியாது. எனவே, அவரை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய திட்டமிட்டோம். அவர் ஆஃப் ஸ்பின் பந்துகளில் தடுமாறுவார் என்பதால் ஹர்பஜன் சிங்கை முதலில் பந்துவீசச் செய்தோம் என குறிப்பிட்டார்.

ஹர்பஜன் சிங் திட்டம்
ஹர்பஜன் சிங் கூறுகையில் முதல் இரண்டு பந்துகளை தான் வேகமாக வீசியதாகவும், அந்த பந்துகள் அதிகம் சுழலவில்லை. எனவே, அடுத்த இரண்டு பந்துகளை குறைந்த வேகத்தில் வீசியதாகவும் கூறினார். ஹர்பஜன் வீசிய நான்காவது பந்தில் கிறிஸ் கெயில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெயில் தடுமாற்றம்
கிறிஸ் கெயில் ஹர்பஜன் வீசிய முதல் மூன்று பந்துகளை சந்திக்கத் திணறினார். நான்காவது பந்தை டிரைவ் அடிக்க முயன்றார் கெயில். ஆனால், பந்து அதிகம் சுழன்று அவுட்சைட் ஆஃப் திசையில் சென்றது. இதை கணிக்கத் தவறிய கெயில் பேட்டில் பந்து எட்ஜ் ஆகி தோனியிடம் சென்றது.

ஹர்பஜன் அசத்தல் பந்துவீச்சு
தோனி - ஹர்பஜன் சிங் திட்டமிட்டு முக்கிய விக்கெட்டான கிறிஸ் கெயிலை வீழ்த்தினர். ஹர்பஜன் அதே ஓவரின் ஆறாவது பந்தில் மாயங்க் அகர்வாலையும் வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் ஹர்பஜன் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.


Click it and Unblock the Notifications