For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா.. இப்படி பால் போடுற? கடுப்பான தோனி.. நர்சரி குழந்தை போல பம்மிய தீபக் சாஹர்.. பதறிய அம்பயர்!

Recommended Video

IPL 2019: Chennai vs Punjab match 18 | சென்னை ரசிகர்களை டென்ஷன் ஆகிய தீபக் சாஹர்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டியில் தீபக் சாஹரின் பந்துவீச்சை பார்த்து தோனி தன் பொறுமையை இழந்தார். பொதுவாக தோனி அவ்வளவு எளிதில் தன் பொறுமை இழந்து கோபப்படமாட்டார். எனவே, இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தப் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை 160 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதுதான் 19வது ஓவரில் சாஹர் பந்துவீச வந்தார்.

தோனியின் திட்டம்

தோனியின் திட்டம்

இந்த ஓவரில் சாஹர் ரன்களைக் கட்டுப்படுத்தினால், கடைசி ஓவரில் சமாளித்து சென்னை அணி எளிதாக வெற்றி பெறும் என்பதே தோனியின் திட்டமாக இருந்தது. அதற்கேற்றார்ப் போல சாஹர் பந்துவீசுவார் என்று பார்த்தால், அவர் அதிர்ச்சி அளித்தார்.

மோசமான நோ பால்

மோசமான நோ பால்

முதல் பந்தை சாஹர் வீசினார். பந்து அவரது கையில் இருந்து பாதியில் நழுவி ஃபுல்-டாஸாக பேட்ஸ்மேனிடம் இருந்து அதிக தூரம் விலகிச் சென்றது. பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் இந்த பந்தில் ஃபோர் அடித்தார். பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே சென்றதற்காக நோ பால் கொடுத்தார் அம்பயர். இதனால் 5 ரன்கள் கிடைத்தது.

மீண்டும் நோ பால்

மீண்டும் நோ பால்

மீண்டும் முதல் பந்தை வீச வந்த சாஹர், மீண்டும் பந்தை கைகளில் இருந்து நழுவவிட, இடுப்புக்கு மேல் ஃபுல்-டாஸ் ஆக சென்று நோ-பால் ஆனது. இந்த முறை இரண்டு ரன்கள் எடுத்தார் சர்ப்ராஸ். இப்படி ரன்கள் தண்ணீராக போவதைப் பார்த்த தோனி, தன் பொறுமையை இழந்து சாஹரிடம் வந்தார்.

நர்சரி குழந்தை சாஹர்

தோனி செம கோபமாக ஏதோ கேட்க, சாஹர், தோனியின் கண்களை பார்க்க முடியாமல், கீழே பார்த்துக் கொண்டு கையில் வியர்வையின் ஈரத்தால் பந்து நழுவிச் சென்றதாக கூறினார். அந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள், "என்னங்க நர்சரி குழந்தை மாதிரி பண்றாரே சாஹர்!" என கலாய்த்தார்கள்.

பின்னே சென்ற அம்பயர்

பின்னே சென்ற அம்பயர்

தோனி கோபமாக அறிவுரை கூற வந்த போது, என்னவோ, ஏதோ என அம்பயர் அருகே வந்தார். எனினும், தோனி சாஹரிடம் பேச ஆரம்பித்தவுடன், ஒரு அடி பின்னே வைத்து நின்று விட்டார்.

செம பௌலிங்

செம பௌலிங்

எனினும், சாஹர் அதன் பின் ஆறு பந்துகளையும் சிறப்பாக வீசினார். முதலில் கொடுத்த 8 ரன்கள் தவிர்த்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டையும் எடுத்தார் சாஹர். கடைசி ஓவரில் பஞ்சாப் 3 ரன்கள் மட்டுமே எடுக்க சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, April 7, 2019, 10:42 [IST]
Other articles published on Apr 7, 2019
English summary
CSK vs KXIP : MS Dhoni got angry when Deepak Chahar bowled 2 no balls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+