Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"எவ்வளவு வயசானாலும் சிங்கம் எப்போதும் சிங்கம் தான்" சோசியல் மீடியாவை டேக் ஓவர் செய்யும் தோனி மீம்ஸ்!

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்யம் பற்றி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

GOAT திரைப்படத்தில் விஜயை பார்த்து ஒய்ஜி மகேந்திரன், "எவ்வளவு வயசான என்னய்யா.. தி லயன் இஸ் ஆல்வேஸ் ஏ லயன்" என்று சொல்வார். இதில் வரும் விஜயை தோனியாகவும், ஒய்ஜி மகேந்திரனை சிஎஸ்கே ரசிகர்களாகவும் மாற்றி, ஓய்வு பெற்று எத்தனை வருமானாலும் என்னய்யா.. லயன் இஸ் ஆல்வேஸ் ஏ லயன் என்று சொல்வது போல் ஆடிய இன்னிங்ஸ் கூஸ்பம்ப் மொமண்ட்.

memes ipl 2025 ms dhoni csk

புஷ்பா படத்தில் ஃபகத் ஃபாசிலை பார்த்து அல்லு அர்ஜூன், "நீ முடிஞ்சா புடிச்சுக்கோடா ஷெகாவத்து.. பிடிச்சாக்கா உட்டுடுறேன் சிண்டிகேட்டு" என்று ஒரு ராகம் பாடுவார். அதனை அப்படியே மாற்றி அல்லு அர்ஜுனாக ஜடேஜாவையும், ஷேகாவத்தாக அம்பயரையும் மாற்றி, "நீ முடிஞ்சா பதானி விக்கெட்டை தடுத்துக்கடா அம்பயரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

memes ipl 2025 ms dhoni csk

பிகில் படத்தில் விஜய்," இந்த ஃபுல்பால் தான்மா நமக்கு கொஞ்சம் டச் விட்டு போச்சு.. ஆனால் சம்பவம்லா ஃபுல் ஃபுளோவுல போய்கிட்டு இருக்கு" என்று சொல்வார். அதில் வரும் விஜயை தோனியாக மாற்றி, "இந்த ஃபினிஷிங் தான் கொஞ்சம் டச் விட்டுப் போச்சு.. ஆனா விக்கெட் கீப்பிங் எல்லாம் செம்ம ஃபுளோவுல இருக்குது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதிருதா ரகம்.

memes ipl 2025 ms dhoni csk

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் ஜெயிலில் இருந்து ரிலீஸாகி வெளியில் வரும் போது சுனில், "அதே ஸ்டைலு.. அதே கலரு.. அதே மாஸ்.. விண்டேஜ் ஏகே இஸ் பேக்" என்று சொல்வார். அதனை அப்படியே தோனிக்கு மாற்றி, "அதே கேப்டன்சி.. அதே விக்கெட் கீப்பிங்.. அதே பேட்டிங்.. ஆல்ரவுண்ட் ஷோ ஃபிரம் தோனி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நாயகன் மீண்டும் வரான் ரகம்.

memes ipl 2025 ms dhoni csk

சீட்டு ஆட்டத்தில் விளையாடும் ஒருவரை டார்க்கர் செய்யும் வடிவேலு, எதிரணியின் வெற்றிக்கு காரணமாக அமைவார். அப்போது எதிரணி தரப்பில் வடிவேலுவை பார்த்து, "மகனே அங்குசாமி.. ரொம்ப நன்றியா" என்று சொல்வார்கள். அதனை அப்படியே மாற்றி வடிவேலுவாக ஷர்துல் தாக்கூரையும், எதிரணியாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "மகனே ஷர்துல் தாக்கூர்.. ரொம்ப நன்றிப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிகினாரு ஒருத்தரு ரகம்.

memes ipl 2025 ms dhoni csk
Story first published: Tuesday, April 15, 2025, 10:22 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+