Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்றும் தோனி ஸ்பெஷல் இருக்கு.. இன்னும் 15 ரன்கள் தான்.. டி20 -ல் படைக்கப்போகும் மெகா சாதனை.. விவரம்

மும்பை: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி பெரும் சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது.

Recommended Video

Dhoni போல இருக்கிறார்.. Dinesh Karthik-ஐ பாராட்டிய Faf Du Plessis

ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்த போதும், ரசிகர்களுக்கு அது பெரிய வருத்தத்தை கொடுக்கவில்லை. இதற்கு காரணம் தோனி தந்த கம்பேக் தான்.

சிஎஸ்கே ரசிகர்கள் குஷி

சிஎஸ்கே ரசிகர்கள் குஷி

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 61 ரன்களுக்கெல்லாம் சிஎஸ்கேவின் 5 விக்கெட்கள் சரிந்துவிட்டன. இதன் பின்னர் வந்த தோனி, 38 பந்துகளில் அரைசதம் விளாசி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். கேப்டன் ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் சேர்ந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் சிஎஸ்கே நல்ல டார்கெட்டை நிர்ணயிக்க முடிந்தது.

தோனி படைக்கும் சாதனை

தோனி படைக்கும் சாதனை

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் தோனிக்கு பெரும் சாதனைக்கான வாய்ப்பு உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4 இந்திய வீரர்கள் மட்டுமே 7,000 ரன்களை கடந்துள்ளனர். இன்று தோனி 15 ரன்கள் மட்டும் அடித்துவிட்டால், இந்த சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துவிடுவார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இன்றும், தான் ஒரு ராஜா என நிரூபிப்பார்.

சாதனையாளர்களின் பட்டியல்

சாதனையாளர்களின் பட்டியல்

இதற்கு முன்னர் 7,000 ரன்களை கடந்தவர்களின் விவரங்களை பார்க்கலாம்.

விராட் கோலி - 10,326 ரன்கள்

ரோகித் சர்மா - 9,936 ரன்கள்

ஷிகர் தவான் - 8,818 ரன்கள்

ராபின் உத்தப்பா - 7,070 ரன்கள்

தோனி - 6,985 ரன்கள்

சர்வதேச ரெக்கார்ட்

சர்வதேச ரெக்கார்ட்

சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் இருக்கிறார். இவரை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், கெயீரன் பொல்லார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Thursday, March 31, 2022, 17:25 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+