சென்னை: சிஎஸ்கே அணி வீரர்களால் சிக்ஸ் அடிக்க முடியாமல் இருப்பதுதான் பிரச்சனை விவாதித்து வருகின்றனர். ஆனால் சிஎஸ்கே வீரர்களால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை என்றாலும், கூடுதலாக பவுண்டரியை விளாசி அதனை சமன் செய்து வருகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் உண்மையான சிக்கல் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் முதல் சிக்ஸ் 12வது ஓவரில் மட்டுமே வந்தது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாகவே 3 சிக்சர்களை மட்டுமே விளாசியது. சிஎஸ்கே அணியால் 175 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய முடியாததற்கு இதுவும் காரணமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 3 சிக்சர்களை விளாசி இருந்தாலும், மொத்தமாக 20 பவுண்டரியை விளாசி இருக்கிறது.
இதன் மூலமாக மட்டும் 98 ரன்களை சிஎஸ்கே அணி விளாசியுள்ளது. அதேபோல் லக்னோ அணி 10 சிக்ஸ், 11 பவுண்டரியை விளாசி இருக்கிறது. இதன் மூலமாக மொத்தமாக 104 ரன்களை லக்னோ அணி விளாசி இருக்கிறது. சிக்ஸ், பவுண்டரி மூலமாக அடிக்கப்பட்ட ரன்களில் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 6 ரன்கள் மட்டும்தான்.
சிஎஸ்கே அணி வீரர்களால் சிக்ஸ் அடிக்க முடியவில்லை என்றாலும், எளிதாக பவுண்டரியை விளாசி முடிகிறது. மைதானத்தின் எந்த திசையிலும் இடைவெளியை கண்டுபிடித்து வீரர்கள் பவுண்டரியை விளாசும் திறமையுடன் இருக்கின்றனர். ஆனால் சிஎஸ்கே அணியின் முக்கியமான பிரச்சனை என்னவென்ரால், மிடில் ஓவர்களில் சிக்ஸ் அடிக்க முடியாமல் திணறுவதுதான்.
நேற்றைய ஆட்டத்தில் கூட 6.1 ஓவர்களில் இருந்து 11.1 ஓவர்கள், அதாவது 30 பந்துகளாக ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இந்த 30 பந்துகளில் சிஎஸ்கே அணி சில பவுண்டரிகளை விளாசி இருந்தால், 18வது ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றிருக்க முடியும். இதனால் சிஎஸ்கே அணியின் பிரச்சனை மிடில் ஆர்டரில் மட்டுமே இருக்கிறது.
அதனை களைந்தாலே வரும் போட்டிகளிலும் சிஎஸ்கே அணியால் எளிதாக வெல்ல முடியும். குறிப்பாக ராகுல் திரிப்பாட்டி 6 போட்டிகளில் விளையாடியும், ஒரு இன்னிங்ஸில் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சிஎஸ்கே அணியில் உள்ள வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு அளித்தால், அந்த சிக்கலை தீர்க்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.