Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க பாதி தான் இருக்கு.. இருந்தாலும் செம ஸ்டைல்.. தோனியின் புது தாடி.. வைரல்!

அபுதாபி : 2020 ஐபிஎல் துவங்கியதை விட தோனியின் புதிய தாடி தான் இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பங்கேற்க தோனி மைதானத்துக்குள் நுழைந்த உடன் அவரது தோற்றம் அனைவரையும் ஈர்த்தது.

புது தாடி

புது தாடி

இளமையுடன் காட்சி அளித்த தோனி, தாடியை புது மாதிரியாக வடிவமைத்து கலக்கி இருந்தார். நேராக உள்ளே வந்தவர் பந்தை வாங்கி திடீரென பந்து வீசினார். அந்த வீடியோவை ஐபிஎல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட உடன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்தது.

ஹேர் டிரான்ஸ்பிளான்ட்?

ஹேர் டிரான்ஸ்பிளான்ட்?

தோனியின் ஹேர்கட்டும் மிகவும் இளமையுடன் இருந்தது. சில ரசிகர்கள் தோனி ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்துள்ளாரா? என்று கூட இணையத்தில் தேடி வருகிறார்கள். அந்த அளவுக்கு இளமையாக மாறி உள்ளார் தல தோனி.

சிங்கம்

சிங்கம்

அவரது தாடி சிங்கம் படத்தில் வரும் சூர்யா தாடியை கொஞ்சம் மாற்றி அமைத்தது போல இருக்கிறது. அடுத்து டாஸ் போட வந்த தோனி வேடிக்கையாக கிண்டல் அடித்து பேசினார். ஸ்லிப்பில் பீல்டிங் நிறுத்தலாமா? என அம்பயரிடம் கேட்டதாக கூறினார். ஏன் தெரியுமா?

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக வீரர்கள் அருகே வரக் கூடாது என்பதால் ஸ்லிப் பீல்டிங்கில் வீரர்கள் அருகருகே நிற்கலாமா? என கேட்டதாக கூறி கிண்டல் அடித்தார். டாஸ் வென்ற தோனி பீல்டிங் தேர்வு செய்தார்.

டாஸ் முடிவு ஏன்?

டாஸ் முடிவு ஏன்?

போட்டி நடக்கும் இடத்தில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து வீச முடியாது. அதனால் பீல்டிங் தேர்வு செய்ததாக கூறினார் தோனி. 2020 ஐபிஎல் தொடரை டாஸ் வென்று வெற்றிகரமாக துவக்கி இருக்கிறது சிஎஸ்கே அணி. இதே வெற்றிநடை கடைசி வரை இருக்குமா?

Story first published: Saturday, September 19, 2020, 21:00 [IST]
Other articles published on Sep 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+