Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs PBKS: ஆயுஷ் மாத்ரே வெறித்தனம் அரைசதம்.. ரெய்னா சாதனை முறியடிப்பு.. ரசிகர்களுக்கு விருந்து

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஸ் மாத்திரை 29 பந்துகளில் அரை சதம் விளாசி சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். சிஎஸ்கே அணி எப்போதுமே பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ஆனால் கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணியும் பேட்டிங் படு மோசமாக இருந்தது.

இந்த சூழலில் கடந்த சீசனில் பல இளம் வீரர்களை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது. அதில் முக்கியமான வீரராக கருதப்பட்டவர் ஆயுஷ் மாத்ரே, அண்டர் 19 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகவும் ஆயுஷ் மாத்ரே இருந்தார். அண்மையில் அண்டர் 19 உலக கோப்பையை இந்திய அணிக்காக வென்று தந்தார்.

இதனால் ஆயுஷ் மாத்ரே மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் போட்டியில் ஆயுஷ் மாத்ரே பெரிய அளவு சோபிக்கவில்லை. இந்த தருணத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆயுஷ் மாத்ரே மூன்றாவது வீரராக விளையாடினார். தொடக்க வீரர் சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, சிஎஸ்கே அணி 14 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

இந்த தருணத்தில் மூன்றாவது வீரராக விளையாடிய ஆயுஷ் மாத்ரே கவுண்டர் அட்டாக்கிங் ஷாட்களை ஆடி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவுண்டரி, சிக்சர் என பறக்க விட பஞ்சாப் அணி பவுலர்கள் தடுமாறினர். பவர் பிளேவில் எப்போதுமே சிஎஸ்கே அணி கடந்த சில சீசன்களாக மெதுவாக விளையாடி வந்த நிலையில், அந்த பெயரை மாற்ற வேண்டும் என்று வெறித்தனமாக அவர் விளையாடினார்.

29 பந்துகளை எதிர்கொண்ட அவர் அரை சதம் வளாசினார். இதில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும். சுழற் பந்துவீச்சு வேகப்பந்துவீச்சு என அனைத்தையும் அவர் அடித்து நொறுக்கினார். இதன் மூலம் ஆயுஷ் மாத்ரே ஒரு மகத்தான சாதனையை உடைத்து இருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.இதற்கு முன்பாக சிஎஸ்கே அணி ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா, தனது 21 வயது 148 நாட்களில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் முதல் அரை சதம் அடிக்க ஆயுஷ் மாத்ரே, அதனை 18 வயது 261 நாட்களில் அடித்து முறியடித்திருக்கிறார்.

Story first published: Friday, April 3, 2026, 20:35 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+