Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பீல்டிங், கேட்ச் டிராப்.. சிஎஸ்கே அணியின் 4வது தோல்விக்கு அதுதான் முதல் காரணம்.. புலம்பிய ருதுராஜ்!

சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர்களின் மோசமான ஃபீல்டிங் காரணமாக தோல்வியடைந்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கேட்ச்களை கோட்டைவிட்ட பேட்ஸ்மேன்கள் கூடுதலாக 30 ரன்கள் சேர்க்கும் போது, அது மிகப்பெரிய பின்னடைவாக மாறுவதாக கூறிய அவர், ஃபீல்டிங்கின் போது கூடுதல் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி முதல் போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

CSK vs PBKS Catch Drop and Fielding the reason for the loss against Punjab Kings says CSK Captain Ruturaj Gaikwad

இந்த போட்டியின் தோல்விக்கு சிஎஸ்கே அணி கோட்டைவிட்ட கேட்ச்களே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோருக்கு சிஎஸ்கே ஃபீல்டர்கள் விட்ட கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த தோல்விக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், மோசமான ஃபீல்டிங் காரணமாக இந்த தோல்வி அமைந்துள்ளது.

கடைசி 4 போட்டிகளில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் உச்சத்தில் இல்லை. கேட்ச்களை கோட்டைவிட்ட பின், அதே பேட்ஸ்மேன்க் கூடுதலாக 30 ரன்களை விளாசுகிறார்கள். அதேபோல் சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரின் ரிஸ்க் மிகப்பெரிய பலனை அந்த அணிக்கு கொடுத்துள்ளது.

நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். ஒருவேளை 15 ரன்களை குறைத்திருந்தால், சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனாலும் தோல்விக்கு கேட்ச் டிராப் முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல் 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக தொடங்கினார்கள்.

இருவருமே வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள். அதேபோல் 2 முதல் 3 சிக்ஸ் கிடைத்திருந்தால், ஆட்டத்தில் எங்களின் கைகள் ஓங்கியிருக்கும். பவர் பிளேவில் சிறப்பாக ஆடி இருந்தோம். அதேபோல் கான்வே எப்போதும் டைமிங்கை வைத்து ஷாட்டை உருவாக்கும் பேட்ஸ்மேன். அதனால் ஜடேஜா அந்த நேரத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது.

அதேபோல் அவரின் ரோலும் வித்தியாசமானது. கான்வே சிக்ஸ் அடிப்பதற்காக காத்திருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் கான்வே ரிட்டையர்ட் அவுட் ஆவது அத்தியாவசியமாகிவிட்டது. ஃபீல்டிங்கின் போது கொஞ்சம் உற்சாகமாக இருக்க வேண்டும். பதற்றமாக இருந்தால் கேட்ச்களை கோட்டைவிடுவோம். சில நேரங்களில் 2 முதல் 3 ரன்களை தடுத்து, ஒரு ரன் அவுட் செய்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் மோசமான நாள் அமையும். ஆனால் ஃபீல்டிங்கிற்கு அப்படி இருக்க கூடாது என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, April 8, 2025, 23:38 [IST]
Other articles published on Apr 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+