சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 4வது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோஷியல் மீடியாவில் நடைபெற்ற உருவாக்கப்பட்ட மீம்ஸை பார்க்கலாம்.
யாரடி நீ மோகினி படத்தில் இன்டர்வியூ முடித்துவிட்டு வரும் தனுஷை பார்த்து தந்தை ரகுவரன், "பரவால்ல விடு.. நீ இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விஷயம்" என்று பாராட்டுவார். அதனை அப்படியே தனுஷாக சிஎஸ்கே அணியையும், ரகுவரனாக ரசிகர்களையும் மாற்றி, "பரவால்ல விடு.. நீ 200+ ரன்கள் அடிச்சதே பெரிய விஷயம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகனின் புலம்பல்.

பஞ்சாப் அணியின் பால் வல்தாட்டிக்கு பின், மீண்டும் தொடக்க வீரராக பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசி இருக்கிறார். குஸ்தி படத்தில் கருப்பு துண்டுடன் வரும் விஜயகுமாரை பார்த்து வடிவேலு, "ஐயா வைகோ ஐயா.." என்று உற்சாகமடைவார். இதில் வரும் வடிவேலுவை சிஎஸ்கே ரசிகர்களாக மாற்றி, "ஐயா இடதுகை பால் வல்தாட்டி ஐயா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

சூர்யவம்சன் படத்தில் யானை மீது சவாரி செய்யும் குட்டி சக்திவேலை, "சவாரி நல்லாயிருந்துச்சா.. கீழ இறங்கு" என்று சரத் குமார் இறக்குவார்.. இதில் வரும் குட்டி சக்திவேலாக ஸ்ரேயாஸ் ஐயரையும், சரத்குமாராக கலீல் அஹ்மத்தையும் மாற்றி, "சிக்ஸ் அடிச்சது நல்லாருந்துச்சா.. இப்போ வெளியே போ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நான்தான்டா இங்க கிங்கு ரகம்.

7ஜி ரயின்போ காலனி படத்தில் ஹீரோவின் தந்தை, "எது தூங்குறதா.. என் பையனுக்கு ஹீரோ ஹோண்டாவுல வேலை கிடைச்சிருக்கு" என்று சொல்வார். அதனை அப்படியே சிஎஸ்கே ரசிகர்களாக மாற்றி, "எது தூங்குறதா.. எங்க தல 3 சிக்ஸ் அடிச்சிருக்காரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிக்ஸ்-க்குலாம் 2 பாய்ண்ட் கொடுக்க மாட்டாங்க குமாரு மொமண்ட்.

சென்னை 28 படத்தில் சீனுவுக்கு கடைசி வரை கேட்ச் பிடிக்க தெரியாது. ஜெய் அடிக்கும் ஒரு த்ரோவை பிடிக்க முடியாமல் ஓடுவார். அதில் வரும் பிரேம்ஜி-யாக சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணியின் ஃபீல்டர்களை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் கையில் வெண்ணய் தடவிய மொமண்ட்.
