சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் பிரகாஷ் ராஜிடம் செல்போனில் பேசும் தனுஷ், "என்ன சொன்னிங்க.. மவனே.. எனக்கு லெஃப்டா.. நீங்க உங்க ரைட்ல பாருங்க" என்று மாஸாக சொல்லுவார். அதில் வரும் தனுஷை ருதுராஜ் கெய்க்வாடாக மாற்றி, "என்ன சொன்னிங்க.. காயத்தால் நல்ல கேப்டன்சி பன்ற மிகப்பெரிய சான்ஸை மிஸ் பண்ணிட்டேனா.. அது காஸ்ட்லி மிஸ் இல்ல.. ஜஸ்ட் மிஸ்ஸு.. கிரிக்கெட் வாழ்க்கையையே முடிச்சிவிட்டு இருப்பானுங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எஸ்கேப் ஆயிட்டேன்டா மொமண்ட்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, வில்லன் ஒருவரை, "நீயெல்லாம் திரும்ப பொறந்து வந்தா கூட என்ட்ட மாட்டீறாத" என்று சொல்லுவார். அதில் வரும் விஜய் சேதுபதியாக பஞ்சாப் அணியாகவும், வில்லனாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "கடைசி 8ல் 7 போட்டியில் வென்றுள்ளேன்.. நீயெல்லாம் திரும்ப பொறந்து வந்தா கூட என்ட்ட மாட்டீறாத" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் மொமண்ட்.

பசங்க படத்தில் அன்பு கதாபாத்திரம் விபத்தில் சிக்கிய போது, ஜீவா கடைசியில் திருந்தி, "கமான் அன்பு.. எந்திரிடா" என்று கைதட்டி பாராட்டுவார். இதில் வரும் அன்புவாக சிஎஸ்கே அணியையும், ஜீவாவாக மும்பை அணியையும் மாற்றி, "எந்திரடா அன்பு.. கமான்டா அன்பு.. நீ தோத்துட்டா நான் புள்ளிப் பட்டியலில் கீழே வந்துருவேன்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நண்பேண்டா மொமண்ட்.

படையப்பா படத்தில் மின்சாரக் கண்ணா பாடலில், "ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்" என்று ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பாடுவார். அதனை அப்படியே தீபக் ஹூடாவுக்கு மாற்றி, ஒரு Clownக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என்று சிஎஸ்கே ரசிகர்கள் பாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரின் மனசாட்சி.

காதல் படத்தில் சுகுமார், "இதெல்லாம் ஒரு பொழப்பு.. இதுக்கு இவ்வளவு அலப்பறை வேற" என்று சொல்லுவார்.. அதில் வரும் காதல் சுகுமாராக சாஹலை மாற்றி, "இதெல்லாம் ஒரு டீமு.. இதுக்கு இவ்வளவு அலப்பறை வேற" என்று சொல்லி ஹாட்ரிக் வீழ்த்திவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் மொமண்ட்.

