IPL 2026: போதுமான இலக்கு தான் வைத்தோம்..பவுலிங்கில் தடுமாறி விட்டோம்..சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை
சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தும் அதனை பஞ்சாப் கிங்ஸ் அணி 8 பந்துகள் எஞ்சிய நிலையில் வெறும் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானம் என்பது சிஎஸ்கேவுக்கு முன்பு ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது.
ஆனால், தற்போது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. பேட்டிங் பலமாக உள்ள நிலையில் பந்துவீச்சு மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், இந்த ஆடுகளத்திற்கு இந்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் தான்.

வேகபந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் கொஞ்சம் சாதகமாகவும் இருந்தது. சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது பவுலர்களுக்கு பிடிமானம் நன்றாக இருந்தது. இதனால் பந்து கொஞ்சம் நின்று வந்ததாக நான் நினைத்தேன். பவுண்டரிகளும் தூரமாக இருப்பதால், இந்த இலக்கு ஒரு நல்ல இலக்கு தான். இதனால்தான் சுழற் பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக உள்ளே கொண்டு வந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர் என்ற முறையில் பந்து வீச வைத்தேன்.
ஆனால் இரண்டு ஸ்பின்னர்களுக்குமே அவர்களுடைய நாட்களாக இது இல்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம் பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் நன்றாக தான் செயல்பட்டோம். ஒரு ஓவரில் நான்கு பந்துகள் நன்றாக வீசினால் அழுத்தம் உருவாகும். ஆனால் நாங்கள் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுத்து விடுகிறோம்.
இதன் மூலம் எதிரணிக்கு தேவையான ரன்கள் கிடைத்து விடுகிறது. பந்துவீச்சில் எங்களுக்கு போதிய உத்வேகம் கிடைக்கவில்லை. நிச்சயம் இந்த தோல்வியை மனதில் எடுத்துக் கொள்ள கடினமாக இருக்கின்றது. ஆனால் இந்த போட்டியில் பல நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கிறது. ஆயுஷ் மாத்ரே பிரமாதமாக பேட்டிங் செய்து வருகிறார்.
சிவம் துபேவும் நல்ல முறையில் பேட்டிங் செய்துள்ளார். பேட்டிங் பொருத்தவரை எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கின்றது. பந்துவீச்சில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும். நானும் பேட்டிங்கில் கடைசிவரை நிற்க முயற்சி செய்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தவறான நேரத்தில் அவுட் ஆகிவிட்டேன் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications