Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ்.. சேப்பாக்கம் பிட்ச் எப்படி? மழை வருமா? 2ஆம் பாதியில் இருக்கும் சிக்கல்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 3) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த சீசனின் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்ற சிஎஸ்கே, தனது சொந்த மண்ணில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்க ஆர்வமாக உள்ளது. அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.

சேப்பாக்கம் மைதான புள்ளிவிவரங்கள்:

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 91 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 51 முறையும், இலக்கை விரட்டிய அணி 40 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே இங்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 164 ரன்கள் ஆகும். அதிகபட்சமாக முரளி விஜய் 127 ரன்களும், பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

CSK vs PBKS IPL 2026 Chepauk Pitch Report Weather Update and Match Predictions for Chennai Clash

பிட்ச் அறிக்கை:

சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், கடந்த 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா - ஜிம்பாப்வே இடையே இங்கு நடந்த போட்டியில் இந்தியா 256 ரன்கள் குவித்தது. எனவே, தற்போதைய போட்டியிலும் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது. அதே சமயம் ஆட்டத்தின் போக்கில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.

வானிலை மற்றும் பனிப்பொழிவு:

இந்தப் போட்டியின் போது சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு மிகக் குறைவு வெறும் 3 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மாலை நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். இரவு 9:30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு (Dew) இருக்க வாய்ப்புள்ளதால், இரண்டாம் பாதியில் பந்துவீச்சாளர்களுக்கு பந்தை இறுக்கிப் பிடிப்பது சவாலாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.

கடந்த முறை இந்த மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதியபோது பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்று பார்க்கலாம்.

Story first published: Friday, April 3, 2026, 7:40 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+