Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs PBKS: என் சொந்த அணியை பார்க்கும் போது மனது வலிக்கிறது.. கண்ணீர் வருகிறது.. அஸ்வின் வேதனை

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் மோசமாக விளையாடி வருவது ரசிகர்களை மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலரையும் வேதனை அடைய செய்திருக்கிறது. கடந்த சீசனில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை சிஎஸ்கே அணி பிடித்து தொடரை நிறைவு செய்தது.

இந்த சீசனில் ஆவது சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் எதிராக முதல் போட்டியில் 127 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக 29 ரன்களை சிஎஸ்கே குவித்தது.

ஆனால் பந்துவீச்சு படுமோசமாக இருந்ததால் சிஎஸ்கே அணி மீண்டும் தோல்வியை தழுவி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், சிஎஸ்கே அணியை பார்க்கும்போது எனக்கு மனது உண்மையிலேயே வலிக்கிறது. இது எப்பேர்பட்ட அணி தெரியுமா? எவ்வளவு புகழ் பெற்ற அணி தெரியுமா?

நான் விளையாடிய காலத்தில் இந்த அணி எவ்வாறு செயல்பட்டது தெரியுமா? ஆனால் இப்போது எப்படி இருக்கிறது. இதை பார்க்கும் போது உண்மையிலேயே என்னால் தாங்க முடியவில்லை . சிஎஸ்கே அணி விளையாடும்போது பனிரெண்டாவது ஓவரிலேயே வீரர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். அவ்வளவு என் முதல் இரண்டு பந்திலேயே போட்டி எவ்வாறு மாறப் போகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருக்கிறது என்று ருதுராஜ் கூறினார். அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். ஆடுகளம் சூப்பராக இருந்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. சிஎஸ்கே அணியின் பெரிய குறையை பந்துவீச்சு தான் இவ்வாறு. பந்துவீச்சில் குறை இருக்கும் போது 210 ரன்கள் என்பதெல்லாம் போதாது.

கூடுதலாக சிஎஸ்கே அணி ஒரு 20, 30 ரன்கள் அடித்திருக்க வேண்டும். பவர் பிளேவில் நாம் குறைவான ரன்களை தான் அடித்தோம். அங்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். இதேபோன்று 12 வது ஓவரிலிருந்து நம் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது. ஏதோ சர்பராஸ்கான் இருந்ததால் அவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக சிஎஸ்கே அணி ஸ்கோர் கொஞ்சம் அதிகரித்தது.

சிஎஸ்கே அணி பந்துவீச்சிக் பலம் இல்லை. இதனால் பேட்ஸ்மேன் தான் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொண்டு 242 மேல் குவிக்க முயற்சி செய்ய வேண்டும். இதே போன்று சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியாக செயல்படவில்லை . கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர் போன்ற வீரர்களுக்கு 14 கோடி ரூபாய் என்பது அதிகம்.

ஆனால் மற்ற அணி வீரர்கள் எல்லாம் ஹர்ஷ் டுபே, கூப்பர் கோனோலி போன்ற வீரர்களை குறைந்த பணத்தில் ஏலத்தில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணி சம்பந்தமே இல்லாமல் இளம் வீரர்களுக்கு இவ்வளவு பணத்தை கொடுத்து இருக்கிறது. நான் இளம் வீரர்கள் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வீருக்கு ஷார்ட்பால் ஆட தெரியவில்லை.

அவர் எதிர்கொண்ட ஏழு பந்துகளிலும் ஷார்ட் பால் தான் அவருக்கு வீசப்பட்டிருக்கிறது. ஆனால் பிரவீஸ் மீண்டும் அணிக்குள் வந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி பலமாக மாறும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இன்னும் சிஎஸ்கே அணி டாப் 4 இடத்திற்கு செல்வார்கள் என நம்புகிறேன். பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரவீஸ் அணியில் விளையாடி வெற்றியை தேடித்தந்தால் இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இது சிஎஸ்கேவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது என அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 4, 2026, 13:53 [IST]
Other articles published on Apr 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+